FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

21 April 2018

மாநிலத் தலைவர் த.நா.ப.ஆ.கழகம்

*அன்புள்ள மாநில / மாவட்ட / வட்ட நிர்வாகிகளே மற்றும் பட்டதாரி ஆசிரிய பெருமக்களே வணக்கம*்...

       கடந்த 10.4.18 (செவ்வாய் ) அன்று JACTTO தலைவர்கள் அனைவரும் சென்னையில் தலைமைச் செயலகத்தில் மதிப்பு மிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர் அவர்களை நேரில் சந்தித்து நாம் அறிவித்துள்ள போராட்ட அறிவிப்பை முறையாக அவர்களிடம் அளித்து , தொடர்ந்து நமது கோரிக்கைகள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் விரிவாக விவாதித்தோம் .இக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று நம்மிடம் பதிலளித்தார் .
                        JACTTO தலைவர்களை அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும் என எதிர் பார்ப்போம் .
             *கடந்த ஆண்டு Sep 6 ஆம் தேதி நம் தலைவர்களை அழைத்து பேசியபோது, CPS திட்டம் ரத்து குறித்த வல்லுநர் குழு அறிக்கையை Nov 30 க்குள் பெற்று அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கூறியிருந்தார்*. ஆனால் பல மாதங்கள் கடந்த பிறகும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை , இச்சூழலில் நம்முடைய முக்கிய கோரிக்கைகளுக்காக விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட் டத்தை அறிவித்துள்ளோம்  .
         அறிவித்துள்ள இப் போராட்டம் *அரசுக்கு போதிய அழுத்தத்தை  அளிக்கும*் என்பதால் இத்தருணத்தில் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட தயாராவோம் ...
         *அரசு எடுக்கும் எவ்வித நடவடிக்கையையும் எதிர்கொண்டு, இப்போராட்டத்தை வெற்றிகரமாக  வெற்றி பெறச் செய்வதே பயனளிக்கும்*...

*எனவே தயாராவோம்*......
*தயாரிப்போம்*........  *வெற்றி போராட்ட களமாக மாற்றிடுவோம்*.......

எதுவும் செய்யாதிருந்தால் ;
எதுவும் கிடைக்காது ......
 
*"Nothing comes out of  Noting "*

                      இவண்
           மாநிலத் தலைவர்
         த.நா.ப.ஆ.கழகம் ( TNGTA).

No comments:

Post a Comment