FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

3 April 2018

பொய்ச் செய்தி வெளியிடுவது தொடர்பான அரசு ஆணையை திரும்பப் பெற பிரதமர் உத்தரவு


பொய்ச் செய்தி வெளியிட்டால், பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

 இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், மத்திய அரசு அந்த உத்தரவை ரத்து செய்தது. பொய்ச் செய்தி தொடர்பான அரசு ஆணையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த விவகாரம் பிரஸ் கவுன்சில் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.


மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொறுப்பில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட ஆணையில் முதல்முறை பொய்ச்செய்தி வெளியிட்டால் 6 மாதங்களுக்கும், இரண்டாவது முறையாக பொய்ச்செய்தி வெளியிடும்போது ஓராண்டுக்கும், மூன்றாவது முறையாக மீறும்போது நிரந்தரமாகவும் சம்மந்தப்பட்ட செய்தியாளரின் அங்கீகார அட்டை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், பொய்ச்செய்தி தொடர்பான ஆணையை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொய்ச்செய்தி விவகாரத்திற்கு பிரஸ் கவுன்சில் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment