FLASH NEWS:
31 March 2018
ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்*
[3/31, 7:03 PM] *ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்*
ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களாக 3,170 உள்ளன.
சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டன.
இந்த உபரி பணியிடங்களில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 541 பணியிடங்கள் காலியாக உள்ளன.
1,992 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.
இதனால் 3,170 காலிப்பணியிடங்கள், 1,178 ஆக குறையும்.
மேலும் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன்மூலம் 2,018 காலியிடங்களே ஏற்படும்.
இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடக்க உள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் ஒன்றிய சீனியாரிட்டியே கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
[3/31, 7:05 PM] MRG: *🔴அடுத்த_அடி..*
குறைவான மாணவர்களைக்கொண்ட பள்ளிகள் இணைக்கப்படும்.
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறையும்...
சர்வசிக்ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு
மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
30 March 2018
TNGTA DINDIGUL Mutual transfer whatsapp group
இக்குழுவில் பதிவிடுவோர் முழு விவரங்களுடன் தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரி மற்றும் மாறுதலில் செல்ல விரும்பும் பகுதியை தெளிவாக குறிப்பிட்டு ஒரே செய்தியாக அனுப்பவும்
தங்களின் தொடர்பு எண்ணையும் சேர்த்து பதிவிடுங்கள். இந்த செய்தியை மற்ற குழுக்களுக்கு அனுப்பும் போது தங்களை தொடர்பு கொள்ள எளிமையாக இருக்கும்.
குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
28 March 2018
24 March 2018
23 March 2018
20 March 2018
Ict 4 tamil teachers
தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL.
தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி தமிழை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள், ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4TAMIL" என்னும் ஒரு எளிய ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
"ICT4TAMIL" என்னும் இந்த ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழை மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
அனைத்து தமிழ் ஆசிரியர்களும் "ICT4TAMIL" என்னும் இந்த FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.
LINK:
https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vallaba1979.ICT4TAMIL
19 March 2018
TNGTA ,திண்டுக்கல் மாவட்டம்
அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியகளுக்கு வணக்கம்.இன்று 19.03.18 மாலை நமது CEO அவர்களை நமது இயக்க பொறுப்பாளர்கள் சந்தித்து தேர்வுப்பணி தொலைவில் உள்ளவர்களுக்கும்,Mutual லில் உள்ளவர்களுக்கும் மாற்றித்தரக்கோரி. TNGTA கழகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.மனுவை பரிசீலித்து CEO அவர்கள் உறுதியாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.___இவண் TNGTA ,திண்டுக்கல் மாவட்டம்.
18 March 2018
14 March 2018
பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு,ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.
அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.
அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
13 March 2018
மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு - SBI அதிரடி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.
அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான். இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.
ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.
இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே’ எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை:
குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, மெட்ரோ மற்றும் பெருநகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராத தொயைான ரூ.50 (ஜிஎஸ்டி தனி) ஆனது, ரூ.15 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.40 (ஜிஎஸ்டி தனி) முறையே ரூ.12 (ஜிஎஸ்டி தனி) மற்றும் ரூ.10 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும், 25 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறியுள்ளது.
+2 கணித தேர்வு கடினம்- 200 க்கு 200 எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு
நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால்
, 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய கணித தேர்வின் வினாத்தாள், சராசரி மாணவர்களால், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத வகையில் அமைந்து உள்ளது. மொத்தம், 200 மதிப்பெண்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண்ணில், 40 கேள்விகள்; ஆறு மதிப்பெண்களில், 10 கேள்விகள் மற்றும், 10 மதிப்பெண்களில், 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
அவற்றில், 10 மதிப்பெண் கேள்விகள் மட்டும், மாணவர்களுக்கு எளிதாக அமைந்திருந்தன. மற்ற கேள்விகளுக்கு விடை எழுத, மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டது.அதாவது, 40 ஒரு மதிப்பெண் கேள்விகளில், 30 கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்வி பட்டியலில் இருந்தும்; 10 கேள்விகள், 'கம் புக்' எனப்படும், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன.
அவற்றில், அனைத்து கேள்விகளுக்கான விடைக்குறிப்புகளும், புத்தகத்தில் இருப்பதை போல இல்லாமல், வினாத்தாளில் வரிசை மாற்றி கேட்கப்பட்டிருந்தன. அதனால், மனப்பாடமாக விடைகளை படித்திருந்த மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்ய திணறினர்.
அதேபோல, ஆறு மதிப்பெண்களுக்கான பிரிவில், ஒரு கேள்விக்கு, கட்டாயமாக பதில் எழுத வேண்டும். இந்த பிரிவில், 'சாய்ஸ்' அடிப்படையில், 15 கேள்விகளில், ஒன்பது கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். அவற்றில், ஐந்து கேள்விகள் மட்டுமே, மாணவர்கள் விடை எழுதுவதற்கு எளிதாக இருந்தன.
இது குறித்து, சென்னை,
பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், ராஜ் கூறியதாவது:
ஏற்கனவே அமலில் உள்ள, 'ப்ளூ பிரின்டில்' இருந்து மாறாமல், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண்களில், தலா, ஒரு கேள்வி, மாணவர்களின், 'சென்டம்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் வகையில், புதிய கேள்வியாக இடம்பெற்றன.
பெரும்பாலான கேள்விகள், இதுவரை, பொதுத் தேர்வுகளில் கேட்கப்படாதவையாக இருந்தன.மாணவர்களின் மனப்பாட கல்வியை மாற்றும் வகையில், ஒரு மதிப்பெண் கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகளின், விடைக்குறிப்புகளில் தவறு இல்லை.
ஆனால், புத்தகத்தில் உள்ளது போன்று இல்லாமல், வரிசை முறை மட்டும் மாறியிருந்தன. வினாத்தாளை பொறுத்தவரை, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், தரமாக இருந்தது. பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள், 'சென்டம்' பெறுவதில் சிரமம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
விலங்கியலும் கடினம்!
பிளஸ் 2 விலங்கியல் தேர்விலும், சில கடினமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.பிளஸ் 2 தேர்வில், நேற்று விலங்கியல் பாட தேர்வும் நடந்தது. விலங்கியல் வினாத்தாளில், பல கேள்விகள் சிந்தனை திறனை சோதிக்கும் வகையில் இருந்தன.
ஒரு மதிப்பெண் கேள்விகளில், 6, 7, 23 ஆகிய கேள்விகளுக்கு, விடைகளை கண்டுபிடிக்க, மாணவர்கள் சிரமப்பட்டனர். ஐந்து மதிப்பெண்களில், 'கார்போஹைட்ரேட்ஸ்' வகைகள் குறித்த கேள்வி இடம்பெற்றது. இதற்கு, நீண்ட பதிலை எழுத வேண்டியிருந்ததால், மாணவர்களுக்கு நேர பற்றாக்குறை ஏற்பட்டது.
இது குறித்து, சென்னை, எம்.சி.டி.எம்.முத்தையா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விலங்கியல் ஆசிரியர், சவுந்தரபாண்டியன் கூறுகையில், ''பெரும்பாலான கேள்விகள், பல முறை கேட்கப்பட்டவை.
அதனால், வினா வங்கியை படித்தவர்களும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றியவர்களும், அதிக மதிப்பெண் பெற முடியும். 10 மதிப்பெண்களுக்கான பிரிவில், 65 மற்றும், 70ம் எண் கேள்விகள், மாணவர்களை சிந்தித்து, பதில் எழுத வைப்பதாக இருந்தன,'' என்றார்.
23 பேர், 'காப்பி'
நேற்றைய தேர்வில், 23 மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டனர். அவர்களில், 18 பேர் கணித தேர்விலும், ஐந்து பேர் விலங்கியல் தேர்விலும் சிக்கினர். அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், எட்டு மாணவர்களும், ஏழு தனித்தேர்வர்களும் பிடிபட்டனர். திருச்சியில், ஏழு பேர், சேலத்தில் ஒருவர் சிக்கியதாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள்:பாதுகாப்பு உறுதிப்படுத்த அறிவுறுத்தல்
அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும்.
இக்குழுவினர், அனைத்து பள்ளிகளிலும், திறந்த வெளிக் கிணறுகள், மின் இணைப்பு செல்லும் பகுதி, கழிவுநீர் கால்வாய் குழிகள், மூடிய நிலையிலும், குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆய்வின் போது, பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர் தொட்டிகள், மின் இணைப்புகள், கிணறுகள் பள்ளிகளில் காணப்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள்.
`
இது எந்த வகையில் நியாயம்?' என, தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதில், அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் காலியாக உள்ள 1,883 பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்காக ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும், ஜூலை மாதத்தில் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை எதன் அடிப்படையில் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தனியார் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் செல்வகுமார், ``மத்திய அரசுப் பள்ளிகளிலும், மாநில அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியராகச் செயல்பட, ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்/டெட்) தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமித்து வருகிறது தமிழக அரசு. ஆனால், அரசு கலைக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் உதவி பேராசிரியர் பணிக்கு எந்தவித தகுதித் தேர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், கடந்த 25 வருடங்களாக யூஜிசி மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.
மற்ற மாநிலங்களில் யூஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்கும்போது, தமிழகத்தில் மட்டும் நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், தங்களுக்குச் சாதகமான விதிமுறையைப் பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமித்துவருகிறார்கள். ஒருமுறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லும்போது, விண்ணப்பம் செய்பவர்களே ஆராய்ச்சி இதழை ஆரம்பித்து அதில் கட்டுரைகளை வெளியிட்டதாக கணக்கு காண்பித்தும், புத்தகங்களை வெளியிடாமலேயே `புத்தகங்களை வெளியிட்டோம்' என்று சொல்லி அதிக மதிப்பெண் பெற்று வேலைக்குச் சேர்ந்துவிடுகின்றனர்.
பலரும் பணி அனுபவத்தையும், பகுதி நேரத்தில் பெற்ற முனைவர் பட்டத்தையும் வைத்து தனித்தனியே மதிப்பெண்ணைப் பெற்று வேலையில் சேர்கின்றனர். இதனால் முழு நேர ஆய்வுப்பணி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்கள் கடைசிவரை அரசு கலைக் கல்லூரியில் வேலை பெற முடிவதில்லை. இதைத் தடுக்கும் வகையில், பகுதி நேரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால், பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்கலாம் அல்லது முனைவர் பட்டத்துக்கு என்று மதிப்பெண் வழங்க வேண்டும்" என்றார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்பைப் பெற்று, தற்போது அரசுக் கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர் ராஜாசிங், ``பணி நியமனம் செய்யும்போது நடத்தப்படும் நேர்முகத்தேர்வு நேர்மையாக நடத்த வேண்டும். நேர்முகத்தேர்வுக் குழுவில் இருப்போர்க்கு வேண்டியவர்களாக இருந்தால் எளிமையான வகையில் கேள்விகளும், மற்றவர்களுக்குக் கடினமான வகையில் கேள்விகள் கேட்கப்படுவதும் நடக்கின்றன. இந்த வேறுபாட்டை களையும் வகையில், என்னென்ன பிரிவிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என்ற முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். கற்பித்தல் முறை, பாடத்திட்டம், பணி அனுபவம், ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள், மாணவர் உளவியல் என்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கலாம். நேர்முகத்தேர்வில் பென்சில் மூலம் மதிப்பெண் போட்டுவிட்டு பிறகு மாற்றும் முறையையும் ஒழிக்கப்பட வேண்டும்.
பகுதி நேரத்தில் பணியாற்றியிருப்பவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதும், முழு நேர ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதையும் மாற்றியமைக்க வேண்டும். நெட் மற்றும் செட் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். முதுநிலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்றிருந்தால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைக்கும் என்றால், செட்/ நெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு எவ்வளவு வருடம் பணியாற்றியிருக்கிறார்களோ அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டும், முழுநேர ஆய்வுப் பணியை மேற்கொண்டவர்களுக்கும், பகுதி நேரத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் வேறுபடுத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். இதைப்போலவே, பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், அரசு கல்லூரிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்லூரியை நடத்துபவர்களே ஆசிரியர்களை நியமித்துக்கொள்கின்றனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளை நடத்தவும், கல்லூரியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் அரசே சம்பளம் வழங்கும் நிலையில், கல்லூரிப் பேராசிரியர்களை மட்டும் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ளலாம் என்பது நியாயமற்ற செயல். இதையும் அரசு கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 16 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் பொதுவான ஒரு விதிமுறையை வகுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்றார் செல்வகுமார்.
விதிமுறைகளைத் தெளிவாக வகுத்து தமிழக அரசு கல்லூரி பேராசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இதை அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் தொடரும் வகையில் தேர்வுசெய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்குமா உயர்கல்வித் துறை?
12 March 2018
ஓய்வூதியம் என்பது சலுகையா? ஓய்வூதியம் பற்றிய ஒரு முழுமையான தகவல்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் :
ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதளிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (Gratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது.
ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.
ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்
1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.
இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த புதிய ஓய்வூதிய திட்ட உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது.
♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.
♦இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
♦ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.
♦1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.
♦அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது.
♦இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.
♦ இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
♦ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.
♦ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது
.
♦பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.
♦எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.
♦பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
♦பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய – மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.
♦உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.
♦இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.
♦இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
♦ அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்
♦ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.
♦புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
♦ ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.
♦லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.
♦நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபடுவது இப்படித்தான்
♦. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள்.
பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்
சொத்துரிமைக்கு நிகரான ஓய்வூதியம் – எஸ்.சம்பத்
********************
# இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில் 17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது.
# அதன் காரணமாக டிசம்பர் 17 என்பது இந்திய அளவில் ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
# இதில் ஒன்றிணையும் விதமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் துவக்கப்பட்டு 26 ஆண்டுகள் கழித்து செப் 1998ல் ஒப்பந்தம் வழியாக ஏற்கப்பட்ட ஓய்வூதியம் முதன் முதலாக 17/12/2000 அன்றுநடைபெற்ற அரசு விழாவில் அன்றைய தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
# ஓய்வூதிய உரிமை தொடர்பான மேற்சொன்ன பொது நல வழக்கு அன்றைய இந்திய தலைமைநீதியரசர் ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வினால்பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பினை தொடங்கும் நீதியரசர் இவ்வாறு துவக்குகிறார்.
“மனுதாரர்களின் கோரிக்கையைபரிசீலிக்கிற போது ஆங்கில நாட்டு அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்த ஊல்சியின் இறுதிபிரார்த்தனையான” அரசிடம் எவ்வளவு பய பக்தியுட்ன் சேவை செய்தேனோ, அது போல நான்இறைவனிடம் சேவை செய்திருந்தால் என் வயோதிக காலத்தில், இந்த ஈன வறிய நிலைக்கு நான்அவரால் தள்ளப்பட்டிருக்க மாட்டேன்” என்ற கூக்குரல் போன்றும்,
“நான் இரத்தம் சிந்திய (என் வாழ்நாளில் சேவை செய்த) அதே வாழ்க்கை முட்களில் வீழ்கின்றேன்” என்ற ஷெல்லியின் சோக ராகமாகவும் உள்ளது”.
அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட பலஅம்சங்களில் மிகக் குறிப்பாக சொல்லப்படும் 3 அம்சங்கள்
(1) ஓய்வூதியர் அனைவரும் ஒரேதன்மையினர்தான் அவர்களை பணி நிறைவு பெற்ற நாளின் அடிப்படையில் பிரிப்பது சரியன்று,
(2)ஓய்வூதியம் அரசின் விருப்பப்படி வழங்கும் கருணைக் கொடையோ அல்லது வெகுமதியோ, அல்லதுபரிசோ கிடையாது அது அவர்களின் சொத்துரிமைக்கு நிகரான உரிமை,
(3) அரசுப் பணியில்உள்ளவர்களுக்கு எப்போதெல்லாம் ஊதியம் உயர்த்தப்படுகிறதோ, அப்போது ஓய்வூதியதாரர்களுக்கும்ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பனவையாகும்.
: புதிய பென்சன் திட்டம் என 01.04.2003ற்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என சொல்லப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதற்கானஓய்வூதியத்திட்டம் தொடர்பாக நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து கணக்கீடு போன்றவை இதுவரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையின் உச்ச கட்டம்.
இதன் நடுவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் இத்தகைய புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு தொகை செலுத்தியவர்கள் பணி ஓய்வு / தன்விருப்ப ஓய்வு / இறப்பு / பணிநீக்கம் / ராஜினாமா போன்ற எந்த வகையில் பணி முடிவு பெற்றாலும் அவர்களமிருந்து பிடித்தம் செய்த பங்குத் தொகையை மட்டும் (பென்சன் என்றில்லாமல்) தீா்வு செய்து வருகின்றன என்பது கூடுதலான வேதனைக்குரிய அம்சம்.
கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி
ஐஆர்டிஏ புதிய அறிவிப்பு
புதுடெல்லி
கடந்த 2 ஆண்டுகளாக கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு *‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’* கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தநிலையில், 2018-19 ஆம்ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனம், கார் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் காப்பீடு மூலம் இழப்பீடு கோருகிறார்கள், இழப்பு கொடுக்கப்படும் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்கான மாற்றி அமைக்கப்பட்ட கார், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்களுக்கான *‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’* கட்டணத்தை இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி 1000 சிசி திறனுக்கு அதிகம் இல்லாத கார்களுக்கு ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.1,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.2,055 ஆக இருந்தது.
இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 75சிசி திறனுக்கு மிகாமல் இருக்கும் வாகனங்களுக்கான ‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’ கட்டணம் ரூ.427 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2017-18-ம் ஆண்டு ரூ.569 ஆக இருந்தது.
75 சிசி முதல் 150 சிசிக்குள் இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கான *‘தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ்’* கட்டணம் கடந்த ஆண்டு இருந்த ரூ.720 என்ற அளவில் இருந்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
1000 சிசி முதல் 1500 சிசிக்குள் இருக்கும் தனிமனிதர்கள் பயன்படுத்தும் கார்களுக்கான *தேர்டு பார்ட்டி* இன்சூரன்ஸ்*கட்டணம் ரூ.2,863 ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டு கட்டணத்தில் இருந்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
அதேசமயம், 1500 சிசிக்கு அதிகமாக இருக்கும் கார்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.7,890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களைப் பொறுத்தவரை, 7500 கிலோ முதல் 12 ஆயிரம் கிலோ, 12 ஆயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் 40 ஆயிரம் கிலோ எடைக்கு மேல் சுமக்கும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தில் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.
விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை
தமிழகத்தில் விரைவில் அஞ்சல் துறையுடன் வங்கி சேவை தொடங்கப்படும் என நேற்று (மார்ச் 10) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 1,56,000 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் 94 தலைமை அஞ்சல் நிலையங்கள் உட்பட மொத்தம் 12,185 தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவைகள், ஏடிஎம் வசதி, பாஸ்போர்ட் பெறும் வசதி போன்றவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் தனியார் வங்கி போல் சேவை ஒன்று தொடங்கப்படும் எனத் தமிழக தலைமை அஞ்சல் வட்டத்தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். சித்தாலப்பாக்கத்தில் 600131 என்ற புதிய பின்கோடுடன் நேற்று துணை அஞ்சலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் அஞ்சலகத்தைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தலைமை அஞ்சல் வட்டத் தலைவர் சம்பத்,“இந்தியாவில் 8,500 பேருக்கு ஒரு அஞ்சலகமும், தமிழகத்தில் 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகமும் உள்ளது.
அஞ்சல் துறையில் வங்கி சேவை போன்று மாநிலம் முழுவதும் 37 இடங்களில் புதிதாக ஒரு சேவை தொடங்கப்படவுள்ளது, இதில் கடன் வசதி தவிர மற்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பழிப்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், 50 ரூபாய் செலுத்தி தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். அதன்படி, பாஸ் புக், ஏடிஎம், கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளலாம்.
அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம், கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தபால் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று 2017ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
11 March 2018
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 250 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது
மருத்துவ படிப்பில் சேர இந்தியா முழுவதும் ‘நீட்’ என்கிற தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்வு அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதலே நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு வரை 2 ஆயிரத்து 900 இடங்கள் இருந்தன. அவற்றில் 455 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிட்டது.
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே தலா 150 இடங்கள் இருந்தன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 50 இடங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 250 இடங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
நுழைவுத்தேர்வு மே 6-ந் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
10 March 2018
1st - 12 th கணித ஆசிரியர்களுக்கான "ICT4MATHS" ANDROID MOBILE APP
கணித ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி கணித பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள், ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4MATHS" என்னும் ஒரு எளிய ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
"ICT4MATHS" என்னும் இந்த ANDROID செயலி அனைத்து நிலைகளிலும் (ஆரம்ப்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் கணித ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு கணிதத்தை மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
அனைத்து கணித ஆசிரியர்களும் ICT4MATHS" என்னும் இந்த ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.
Click here to Direct link to download app
TET- அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2018 பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம்
🌹அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
🌹ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
🌹இப்போதைய நிலையில் சென்னை மாவட்டம் தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
🌹 அதேநேரத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 2 ஆயிரத்து 533 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்தது. இதில் ஆயிரத்து 992 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
🌹மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 541 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த அடிப்படையில் உபரியாக உள்ள ஆயிரத்து 992 ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர். அதன்படி 3 ஆயிரத்து 170 பணியிடங்களில் ஆயிரத்து 178 ஆக காலிப்பணியிடங்கள் குறையும்.
🌹அதேபோல் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் 840 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரத்து 18 பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
🌹இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக உயர வாய்ப்பு
🌹தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
🌹தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது.
🌹 பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
🌹விடுப்பு நாட்கள்: இதையடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
🌹அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
🌹வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது.
🌹வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.
🌹கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது
9 March 2018
அரசாணை எண் 99:பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுசூழல் மன்றங்களின் செயல்பாடுகளை கவனிக்க உதவி இயக்குநர் மற்றும் 32 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து பணி நீட்டிப்பு அரசாணை
மாவட்ட சங்க அலுவலக முகவரி
TNGTA
மாவட்ட சங்க அலுவலக முகவரி
எண் 28 ,LPG வளாகம் 3வது தளம்
AMC சாலை,
ஐஸ்வர்யா ம௹த்துவமனை அருகில்,
திண்டுக்கல்
அன்புடன்
*க.சந்திர சேகரன்*
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
திண்டுக்கல் மாவட்டம்.
'ஸ்மார்ட்' கார்டு பிழை திருத்தம் : இணையதள வசதி மீண்டும் துவக்கம்
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை www.tnpds.gov.in என்ற, இணையதளம் வாயிலாக, மேற்கொள்ளும் வசதியை 2017ல் உணவு துறை துவக்கியது.
சிலர், வேண்டுமென்றே தவறான தகவல்களை பதிவு செய்ததால், இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டுக்காக, மக்களிடம் வாங்கிய 'ஆதார்' விபரத்தில், புகைப்படம் தெளிவாக இல்லை. இதனால், சரியான புகைப்படத்தை, இணையதளம் வாயிலாகவும், பதிவேற்றம் செய்யலாம் என மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர், நடிகர், நடிகையர் படங்களை வேண்டுமென்றே தவறாக பதிவிட்டனர். இதனால் இணையதளத்தில், திருத்தம் மேற்கொள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது, ஸ்மார்ட் கார்டு பணி முடியும் தருவாயில் உள்ளதால், மீண்டும் இணையதள திருத்தம் வசதி துவக்கப்பட்டுள்ளது, என்றார்.
8 March 2018
DSE PROCEEDINGS-அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை
பள்ளிக்கல்வி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை
100 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை click here அரசாணை எண் 86
193 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஓராண்டு ஊதிய நீட்டிப்பு ஆணை click here அரசாணை எண் 87
தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்
தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயற்குழு கூட்டம்*க.சந்திரசேகரன்* மாவட்ட செயலாளர்
*திண்டுக்கல் மாவட்டம்*
*மாவட்ட செயற்குழு கூட்டம்*
இடம்:
*மாவட்ட சங்க* *அலுவலகம், திண்டுக்கல்* *(வன்னியர் மஹால் அருகில்)*
*நாள்*
*10.03.2018 சனிக்கிழமை* *காலை 10.00 மணி*
*அளவில்*
*அன்புடையீர்*
*வணக்கம்* *மாவட்ட
*பொறுப்பாளா்கள்*
தவறாது கலந்துக்
கொள்ள வேண்டிக்
கொள்கிறேன்.
*அன்புடன்*
*க.சந்திரசேகரன்*
மாவட்ட செயலாளர்
தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
திண்டுக்கல் மாவட்டம்
7 March 2018
2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி தாக்கல்
தமிழக அரசின் 2018- 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் அரசின் கடன் அதிகரித்தபடி உள்ளது.
கடனுக்கான வட்டியும் அதிகரித்து வருகிறது. இதனை சமாளித்து புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அணிகள் இணைப்புக்குப் பிறகு முதல் முறையாக முழு பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 2011-ம் ஆண்டு முதல் 8-வது முறையாக அதிமுக அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பட்ஜெட்டுக்கான தேதி குறிப்பிடாமல் இருந்தது. இந்த நிலையில் வரும் 15-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் அல்லது இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்நிலையில், வரும் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 15-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
TNPSC குரூப்2ஏ எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது
குரூப்2ஏ எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 1953 பணிகளுக்கு 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தரவரிசைப்பட்டியலும் வெளியீடு
Direct link
http://www.tnpsc.gov.in/ResultGet-g2a2017rank.html
அரசியல் கட்சி ஆதரவு ஆசிரியர்கள் யார்? : பட்டியல் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவு
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான, அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கென தனியே சங்கங்கள் அமைத்து செயல்படுகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தேர்தல் வரும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை, சங்க நிர்வாகிகள் சந்தித்து, கோரிக்கை மனு அளிப்பது வழக்கம். தேர்தல் முடிந்ததும், ஆட்சிக்கு வரும் கட்சியின் தலைவர்களுக்கு, சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடக்கும்.இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு சாதகமாக செயல்படும் ஆசிரியர்களால், அரசு நிர்வாகத்தின் ரகசியங்கள், கட்சி தலைவர்களுக்கு கசிவதாக, அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துஉள்ளன. இதனால், சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.இதன் ஒரு கட்டமாக, 2014 பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்ததாக கூறி, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டு, கல்வித் துறை அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு, ராஜ்குமார் அளித்துள்ள விளக்கத்தில், அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், தேர்தலில் கட்சி தலைவர்களை சந்தித்த ஆசிரியர்கள் குறித்தும் வெளியான செய்திகளையும், கல்வித் துறையிடம் கடிதமாக கொடுத்து, தன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதா என, கேட்டுள்ளார்.இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றும் செயல்படும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டியல் வந்ததும், அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். அந்த விளக்கத்திற்கு பின், அவற்றில் விதிமீறல் இருந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
31ம் தேதிக்கு பின்னரும் ஆதார் கெடு நீட்டிக்கப்படலாம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
வரும் 31ம் தேதிக்கு பின்னரும், செல்போன், வங்கிக்கணக்கு உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு நீட்டிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, கன்வில்கர், சந்திராசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்ஜி ஜெனரல் கே.ேக.வேணுகோபால், ‘‘கடந்த காலத்தில் டிசம்பர் 15ம் தேதியில் இருந்து மார்ச் 31ம் தேதி வரையில் காலக்கெடுவை நீட்டித்துள்ளோம். அதேபோல், இம்முறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், இம்மாத இறுதியில்தான் அதை அறிவிக்க முடியும்
இதன் மூலம் மனுதாரர்கள் தங்கள் இறுதிவாதத்தை முன்வைக்க முடியும்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘அட்டர்னி ஜெனரல் சிறப்பான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன் மூலம் மனுதாரர்கள் மீண்டும் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க முடியாது’’ என்றனர்.
இம்மாதம் 31ம் தேதிக்குள் செல்போன், வங்கிக் கணக்குகள், கேஸ் இணைப்புகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் ஆதாரை இணைக்காத ஏராளமானவர்கள் நிம்மதி மூச்சு விடலாம்.
நீட்' தேர்வுக்கு பதிவு : நாளை மறுநாள் முடிவு
சென்னை: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான,
'ஆன்லைன்' பதிவு, நாளை மறுநாள் முடிகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 9ல் துவங்கியது. இந்த பதிவு, நாளை மறுநாள் இரவு, 11:30 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கான கட்டணத்தை, மார்ச், 10 இரவு, 11:30 மணிக்குள் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
பிளஸ் 2 தேர்வில் காப்பி: 16 மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக
16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாக மதுரையில் 3 மாணவர்கள் மற்றும் 1 தனித் தேர்வர் , திண்டுக்கல்லில் 1 தனித் தேர்வர், புதுக்கோட்டையில் 1 மாணவர், திருச்சியில் 6 மாணவர்கள், வேலூரில் 4 தனித் தேர்வர்கள் என மொத்தம் 16 பேர் கண்டறியப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண் - ஆதார் இணைப்பு சரிபார்ப்பு!
மொபைல் எண்கள் சம்பந்தப்பட்ட நபர்களின்
ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆபரேட்டர்களும், ஏஜெண்ட்களும், புதிய சிம் கார்டு வழங்குவதிலும், மொபைல் எண் மறுபரிசோதனையின் போதிலும் அந்த மொபைல் எண்ணுக்குச் சொந்தமானவரின் ஆதார் விவரங்களுக்குப் பதிலாக வேறு விவரங்களைப் பயன்படுத்தியதை ஆதார் ஆணையம் சமீபத்தில் கண்டறிந்தது. இதனால் மொபைல் எண் - ஆதார் இணைப்பு விதிமுறைகளை ஆதார் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. மேலும், சில்லறை விற்பனையாளர்கள், ஏஜெண்ட்கள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும், மொபைல் சந்தாதார்கள் தங்களது மொபைல் எண்ணானது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்எம்எஸ் வாயிலாகத் தகவல் தரும் வசதியை ஏற்படுத்தித் தரும்படி ஆதார் ஆணையம் தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் - மொபைல் எண் இணைப்பில் இதுவரையில், செயல்பாட்டிலிருக்கும் 142.9 கோடி மொபைல் எண்களில் சுமார் 85.7 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணைய அதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்
6 March 2018
மார்ச் 7 ( நாளை முதல்) `ஜிப்மர்’ நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும்
`நீட்’ தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள `ஜிப்மர்’ மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் படிப்பில் உள்ள மாணவர் இடங்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ஜ் (ஜிப்மர்) கல்வி நிறுவனம், இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. இங்கு எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பில் உள்ள 200 மாணவர் இடங்கள் ஜிப்மர் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது.
200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதியில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 7 (நாளை) தொடங்குகிறது.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் `நீட்’ நுழைவுத் தேர்வு வழியாக மட்டுமே மாணவர் இடங்கள் நிரப்பப்படுகின்றன. இருப்பினும், புதுடெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் செயல்படும் ஆல் இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மற்றும் ஜிப்மர் ஆகிய இரண்டு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.
இத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றன.
www.jipmer.edu.in
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்
பிளஸ் 1 பொது தேர்வு நாளை துவக்கம்: 8.61 லட்சம் பேர் பங்கேற்பு
பிளஸ் 1 பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 8.61 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள், 1979ல் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது முதல், பிளஸ் 2வுக்கு,
மாநில அளவிலான பொதுத் தேர்வும், பிளஸ் 1க்கு, மாவட்ட அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது. அதனால், பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்களை பெயரளவில் நடத்தினர்; பிளஸ் 2வுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்தனர்.ஆனால், உயர் கல்வி தொடர்பான நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, அதிக கேள்விகள் இடம் பெறுகின்றன. பிளஸ் 1 பாடங்களை, தமிழக மாணவர்கள் சரியாக படிக்காததால், அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர், உதயசந்திரன் ஆய்வு நடத்தி, பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்தார். இதனால், பிளஸ் 2க்குஉரிய முக்கியத்துவத்தை, பிளஸ் 1க்கும் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதன்படி, 38 ஆண்டுகளுக்கு பின், பிளஸ் 1க்கான பொதுத் தேர்வு, முதன்முதலாக, நாளை துவங்குகிறது. இதில், 8.61 லட்சம் மாணவர்களும், 1,753 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, தமிழகம், புதுச்சேரியில், 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னையில், 156 தேர்வு மையங்களில், 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.புதுச்சேரியில், 38 தேர்வு மையங்களில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழுது கின்றனர். சென்னை, புழல் சிறையில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், பல்வேறு சிறைகளைச் சேர்ந்த, 62 கைதிகள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு குறித்து, குறைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க, அரசு தேர்வு துறை சார்பில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 80125 94105, 80125 94115, 80125 94120, 80125 94125, 93854 94105, 93854 94115, 93854 94120, 93854 94125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.தேர்வு நேரம் என்ன?
இத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 16ல் முடிகிறது. மாணவர்கள், காலை, 9:30 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, வினாத்தாள் வழங்கப்பட்டு, 10:10 மணி வரை படித்து பார்க்க அனுமதி தரப்படும். பின், 10:15 மணி வரை, மாணவர்களின் சுய விபரங்கள் ஆய்வு செய்யப்படும். அதன்பின், 10:15 மணிக்கு மாணவர்கள் விடை எழுத துவங்கலாம்; பகல், 12:45 மணிக்கு முடியும்.வழக்கமாக, பிளஸ் 1க்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். ஆனால், பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின், பாட மதிப்பெண், 200ல் இருந்து, 100 ஆக குறைக்கப்பட்டது. அதனால், தேர்வு நேரமும், இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.
TN School Attendance - பள்ளி வருகைப்பதிவேடு
Click following link
https://play.google.com/store/apps/details?id=com.klabs.ssa
பள்ளி வருகைப்பதிவேடு
TN School Attendance - பள்ளி வருகைப்பதிவேடு- Android செயலியில் மாணவர்களின் புகைப்படங்கள் தெரியும் வண்ணம்தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது
5 March 2018
எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?
4 March 2018
Kc
⭐⭐⭐⭐⭐⭐
*கொடுத்த* *வாக்குறுதியை *நிறைவேற்றி, அனைத்து பட்டதாரி் ஆசிரியர்களையும், தேர்வு மையத்திலிருந்து விடுவிப்பு செய்தமைக்காக,
மதிப்பு மிகு.
*முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு*,
*தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்* , *திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் மனம் நிறைந்த நன்றி! நன்றி !! நன்றி!!!
என
*க.சந்திர சேகரன்*
மா.செய
TNGTA DGL DT.
3 March 2018
-
9th , 10th , 11th and 12th All Subjects Refresher (Bridge) Course Module Book 2021 பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய Refres...
-
UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பகுதிநேர M.Phil படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு. தொலைதூர கல்வி M.Phil படிப்பிற்கு மட...
-
தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பணி ஈர்ப்பு/அலகு மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்ற நாளைக்கொண்டே பட்டதாரி ஆசிரியர்களின் பத...




















