ஜாக்டோ சார்பாக நடைபெற உள்ள விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.....
விடைத்தாள் திருத்துவது என்பது ஆசிரியர்களின் முக்கியமான கடமையென்பது நம் அனைவருக்கும் தெரியும்.
சி.பி.எஸ் திட்டம் இரத்து, ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தியும் செவி சாய்க்காத அரசிடம் மேலும் அழுத்தம் கொடுத்தேனும் கோரிக்கைகளை நிறைவேற்றியாக வேண்டும் என்பதற்காக கையில் எடுத்திருக்கும் உத்திதான் இது.
மாணவர் நலன் கருதி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதில்லை என எமது போராட்டத்திற்கு எதிராக சிலர் வாட்ஸப் செயலியில் பதிவிட்டு வருகிறார்கள்....
இந்தியாவின் தலையெழுத்தே நான்கு சுவர்கள் கொண்ட ஒரு வகுப்பறையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பது டாக்டர் எஸ்.கோத்தாரியின் மேற்கோள் கருத்து.
மாணவனுக்கு இழப்பு என்பது கற்றல் கற்பித்தல் பாதிப்படைவது மட்டுமே....பல நாட்கள் கற்பித்தல் பணியை புறக்கணித்தவர்கள் நாமல்ல.... அதனால் மாணவர் நலன் புறக்கணிப்புக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
தேர்வுகளை முடித்துவிட்டு மகிழ்ச்சியாக மாணவர்கள் விடுமுறையைக் கழித்து வருகிறார்கள்....
அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால், அரசாங்கத்தின் திட்டங்களில் தொய்வு ஏற்படுத்தியாக வேண்டும். அவ்வாறு தொய்வு ஏற்படும்போது சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு நமது கோரிக்கையைப் பரிசீலிக்கும். அதே தந்திரம்தான் எம்முடையதும்.....
பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாட்கள் திருத்தப்படுவது தாமதமானால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு மேலும் தாமதமாகும். அவ்வாறு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது தாமதமாவதினால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ தள்ளிப் போடுவதால் பெரிய பாதிப்புகள் என்று எதையும் சொல்ல முடியாது.
அதே சமயம் குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுய நெருக்கடி அரசுக்கு இருக்கிறது. அதனால் நம்முடைய கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய அல்லது நம்முடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.
இதுதான் எங்களின் போராட்ட உத்தி. போற்றுவார் போற்றட்டும்...தூற்றுவார் தூற்றட்டும்...எமக்கு அவற்றில் அக்கறையில்லை....தெளிவான பாதையில்தான் போராட்டக் களத்தை அமைத்து போராடி வருகிறோம்..
எமது பாதை சரியெனத் தோன்றினில், எம்மோடு பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அதே சமயம், யாருடைய போராட்டத்தையும் விமர்சிக்கும் குணமும் எமக்கில்லை...
விருப்பமுள்ளவர்கள் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்...விருப்பமில்லாதவர்கள் சற்றே விலகி நிற்கிறார்கள். இதே இரண்டு மட்டுமே ஒரு போராட்டத்தில் நிகழ வேண்டும்.
ஒரு போராட்டத்தின் வெற்றியைக் கெடுக்க நினைப்பது நிச்சயம் ஒரு போராளியின் குணமாகாது....
எனவே, நமது போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கீழ்க்கண்ட இயக்கங்கள் தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.
1. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கம்
2. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
3. தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
4.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
5.தமிழகத் தமிழாசிரியர் கழகம்
6. பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
7. தமிழ்நாடு NET/SET/PhD ஆசிரியர்கள் சங்கம்.
8. தமிழ்நாடு உடற்vகல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் சங்கம்.
👍 நன்றி....

No comments:
Post a Comment