+2 மாதிரி வினாத்தாள்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக SCERT செய்தி வெளியிட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD
Click above link and go to desktop site mode
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வழிகாட்டியும்,மாநில சிறப்புத்தலைவர் திரு.T.S @ T.சுப்ரமணியன் ஐயா அவர்களும், மாநிலத் தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்கள்,மாநில பொதுசெயலாளர் திரு.அ.சுந்தரமூர்த்தி அவர்கள்,திரு.ஜான் உபால்ட், மற்றும் நான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு. இராமேஸ்வரமுருகன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள பிரப்சனை மற்றும் வழக்குகள் குறித்தும்
6 முதல் 10 வகுப்புகள் வரை பாடம் போதிக்கும் உரிமை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கவும் முதுகலை ஆசிரியர்களை 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு பாட வேலைகளை ஒதுக்குவதையும் அதனால் பட்டதாரி ஆசிரியர்களை உபரியாக்கி வெளியேற்றுவதை உடனடியாக கைவிடவும்
பணி நிரவல் விதிமுறை வருடத்திற்கு ஒரு முறை மாற்றாமல் பொதுவான விதிகளை வகுத்திடவும்,
விடுமுறை நாட்களில் பயிற்சிகள் வழங்குவது குறித்தும்,
பல மாவட்டங்களில் மனமொத்த மாறுதல் ஆணை இன்னும் வழங்கப்படாததை குறித்து கேட்ட பொழுது 31 - 07-2018க்குள் ஆணை வழங்குவதாக உறுதியளித்தார்.
சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு 7 பாட வேலைகளுக்கும் அவர்களிக்கு 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததையும் குறித்து மனு அளிக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தெலுங்கு கண்ணடம் போன்ற மொழிகளில் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு.குப்புசாமி அவர்கள் மற்றும் திரு. இராதாகிருஷ்ணன் இணை இயக்குநர் (மே.நி.கல்வி) அவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக சந்தித்தோம்.
இவண்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNGTA)
Thank you Alex.
பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு
தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.மாற்றம் என்ன? தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்
10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார் மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார் தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Dear trs,
தங்களது பயிற்சி வகுப்பில் பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
#. பங்கேற்கும் ஆசிரியர்களின் android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளது எனவும்
Phone internal memory குறைந்தது 1GB space உள்ளது எனவும்
4G internet speed போதுமான அளவில் உள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
# url link , bar code, Qr code ஆகிய மூன்று வழிகளில் நமக்கு தேவையான website க்கு செல்ல முடியும். இவற்றில் QR code முறை எளிது மேலும் அவ்வப்போது contentகளை update செய்ய முடியும் எனவே நமது பாடப்புத்தகங்களில் QR code என்னும் Quick response codeகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
# QR codeகளை scan செய்ய நமது smart phoneல் inbuiltஆக இருக்கும் QR code scanner ஐ பயன்படுத்தி கொள்ளலாம்
அல்லது
Play store வழியாக Cam Scanner appஐ installசெய்து scan செய்யலாம்
அல்லது
Diksha app ஐ installசெய்து அதில் உள்ளscanner மூலமாகவும் scan செய்ய முடியும்.
எந்த scanner மூலம் scan செய்தாலும் contentகள் Diksha app மூலம் மட்டும் தான் play ஆகும் எனவே Diksha appஐ installசெய்வது சிறந்தது.
# QR codes 3 விதமாக உள்ளன.
1. முழு பாடப்புத்தகம் ebook
2. கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் AV Aids.
3. மதிப்பீட்டு பயிற்சி Evaluation/Assessment activities
இவற்றில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Diksha app மூலம் download ஆன files, ecar files ஆக save ஆகியிருக்கும். இவற்றை file manager மூலம் பார்க்க முடியாவிட்டால் ES File explorer app ஐ installசெய்து அதில் ecar என type செய்து search செய்தால் நம்மால் அவற்றை பார்க்க, play மற்றும் share செய்து கொள்ள முடியும்.
# smart phone இல்லாமல் laptop / desktop pc மூலம் QR code scan செய்ய
நமது computerல் முதலில் பாடப்புத்தகத்தை ( ebook ) pdf file ஆக download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Computerல் Cam scanner software ஐ install செய்து நமது web camera மூலம் QR code ஐ scan செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Web camera இல்லாமல் scan செய்ய QR code scanner for Windows என்ற softwareஐ install செய்து அதன் மூலம்QR codeஐ selectசெய்து url link ஐ copyசெய்து அதை Google chromeல் paste செய்தும் contentஐ open செய்ய முடியும்.
Computer மூலம் இவ்வாறு QR code ஐ scan செய்வது கடினம் என நினைத்தால் Google Chrome ல் www.diksha.gov.in என type செய்து Diksha websiteல் நுழைந்து அதில் content explorerஐ select செய்து அதில் syllabusக்கு State board Tamil nadu எனவும் medium, subject, class ஆகியவற்றை சரியாக select செய்து search செய்தால்
நமது பாடப்புத்தகத்தில் உள்ள content resources அனைத்தும் display ஆகும். அதில் இருந்து நமக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து view/play செய்து கொள்ள முடியும். இதற்கு smartphone தேவை இல்லை.
# நமது அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் Internet கண்டிப்பாகத் தேவை.