FLASH NEWS:
31 May 2018
30 May 2018
29 May 2018
24 May 2018
🌻🌻🌻புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்🌻🌻🌻
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது. சிறைச்சாலையில் இருந்து படித்து தேர்வு எழுதிய 186 பேரில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோல்வி அடைந்தவர்கள் 4417 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் பெறலாம். பள்ளி கல்வித்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹெல்ப் லைன்’ மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தகுந்த அறிவுரை வழங்கப்படும். அவர்கள் ஜூன் 28-ந் தேதி மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெற்று பிளஸ்-1 அல்லது வேறு படிப்புகளுக்கு உடனே செல்ல முடியும். எனவே தோல்வியுற்ற மாணவர்கள் சோர்வடைய வேண்டாம். அடுத்ததாக வெற்றிபெறும் ஆலோசனைகளையும் தலைமை ஆசிரியர் வழங்குவார்.
சில பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்வதாக கேள்விப்பட்டேன். அப்படி விளம்பரம் செய்யக்கூடாது என அந்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் விளம்பரம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிமேல் பிளஸ்-1 வகுப்பில் 600 மதிப்பெண்ணும், பிளஸ்-2 வகுப்பில் 600 மதிப்பெண்ணும் சேர்த்து தான் 1,200 மதிப்பெண் கணக்கிடப்படும். ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்று மாற்றி அமைக்கப்பட உள்ளது. தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைத்திருக்கிறோம்.
ஒரு மாணவர் கூட இல்லாத 29 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கணக்கெடுத்து பார்க்கும்போது, 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 890 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. என்றாலும், அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறிந்து, அதன் பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலிக்கும். அதுபோன்ற பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களுடன் இணைந்து ஆசிரியர்களும் செயல்படுவார்கள்.
கூடுதல் மாணவர்களை சேர்க்க கிராமங்களுக்கு ஆசிரியர்கள் சென்று, மாணவர்கள், பெற்றோரை சந்தித்து, தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளில் கிடைக்கும் சலுகைகள், புதிய பாடத்திட்டங்கள் பற்றி பேசி வருகின்றனர். செப்டம்பர் வரை இதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் மூலம் அனைத்து பொதுத்தேர்வுகளையும் சந்திக்க முடியும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் ஊர்வலமாகவும், முரசு கொட்டியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். செப்டம்பரில் மாணவர் சேர்க்கை குறைந்து இருந்தால் அதுபற்றி அரசு பரிசீலிக்கும்.
புதிய பாடத்திட்டம் வெளியிட்டபோது காணப்பட்ட ஒரு சில பிழைகள் சரி செய்யப்பட்டுவிட்டன. ஜூன் மாதம் புத்தகங்களை வழங்கும்போது எந்த பிழையும் இருக்காது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கிறது.
2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் 93 ஆயிரம் பேர். 2014, 2017-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனாலும் ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசு பரிசீலிக்கிறது. மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அரசு என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்பது பற்றி துறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பலர் மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை எழுவதாக கூறப்படும் கருத்தின் அடிப்படையில் அந்த பாடத்திட்டத்தில் பலர் சேர்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு அப்படி இருக்காது.
அரசு பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். பயிற்சி பெற்ற ஆயிரம் மாணவர்களாவது மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நாடாமல் அரசு பள்ளிகளை நாடும் நிலை உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
22 May 2018
சென்னையில் ஜேக்டோ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
இன்று (22.5.2018) சென்னையில் ஜேக்டோ கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..
1. CPS ரத்து செய்து ,பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2.21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
3. ஊதியக்குழு முரண்பாடு களைதல்
4.தொகுப்பூதிய காலம் முறையான பணிக் காலமாக மாற்ற வேண்டும்
5. *பணி நிரவலினை கைவிடுதல்*, . GO.No.56, 100, 101 ரத்து செய்ய வேண்டும்
6. *எதிர்வரும் ஜூன் 9 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜேக்டோ சார்பாக எழுச்சியான ஆர்ப்பாட்டம்* நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நமது இயக்கத்தின் மாநிலத்தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்கள் ஜேக் டோவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
இவண்
அ.சுந்தரமூர்த்தி ,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்.
*K C Tngta DGL DT* *தி ஹிந்து கட்டுரை*
*K C Tngta DGL DT*
*தி ஹிந்து கட்டுரை*
அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.
தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி.
இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?
அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்?
சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?
ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.
சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.
தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.
ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.
ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.
பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:
* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?
* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?
* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?
* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?
* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.
அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது.
ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?
*நன்றி*
தி ஹிந்து
21 May 2018
🌷🌷🌷பிளஸ் 2 தேர்ச்சி 1 சதவீதம் குறைந்தது ஏன்?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்🌷🌷
20 May 2018
மாணவர்கள் இனி வகுப்புக்களை ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது.
🚓🚓🚓மாணவர்கள் இனி வகுப்புக்களை ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது..🚓🚓🚓
கேரளாவில் மாணவர்களுக்கு போலீஸ் செக்: வகுப்புக்கு ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது
திருவனந்தபுரம்: வகுப்புகளுக்கு கட் அடித்து விட்டு சினிமா, பார்க் என சுற்றும் மாணவர்களை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
சில மாணவர்கள் யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போதே புத்தகப்பையில் ரகசியமாக ஒரு சட்டையை மறைத்து வைத்து விட்டு பின்னர் அந்த சட்டையை போட்டு ஊர் சுற்றுபவர்களும் உண்டு.
நகர்ப்புறங்களில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அதை கண்டுகொள்வதில்லை. இதனால் அந்த மாணவர்கள் பல தவறான வழிக்கு சென்று விடுகின்றனர்.
கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, பலாத்காரம் உட்பட பல கிரிமினல் வழக்குகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டது போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புத்தகப்பையுடன் புறப்படும் இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சினிமா, பார்க் என ஊர் சுற்றி வந்தனர்.
இதன் மூலம் கஞ்சா கும்பல்கள் மற்றும் கிரிமினல்களின் வலையில் சிக்கி நாளடைவில் கிரிமினல்களாக மாறிவிடுகின்றனர்.
ஆனால் இந்த விவரம் அவர்களது பெற்றோருக்கு தெரியாது.
திருவனந்தபுரம், கொச்சி உட்பட நகரங்களில் இதுபோல மாணவர்கள் கிரிமினல்களாக மாறும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து அதை கட்டுக்குள் கொண்டுவர கேரள போலீஸ் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
இதன்படி அனைத்து பள்ளிகளையும் தொடர்பு கொண்ட கேரள சைபர் கிரைம் போலீசார் மாணவர்களின் வருகை பதிவேடுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறினர்.
பின்னர் அவை கேரள சைபர் கிரைம் போலீசின் புதிய சாப்ட்வேருடன் இணைக்கப்பட்டன.
தினமும் வகுப்புகள் தொடங்கிய உடன் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையை பரிசோதிப்பார்கள்.
பின்னர் அந்த விவரங்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்த நொடியே மாணவர்கள் வருகை தொடர்பான அனைத்து விவரங்களும் போலீசுக்கு கிடைத்து விடும்.
தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாகவோ. அல்லது வராமலோ இருக்கும் மாணவர்களை போலீசார் கண்காணிக்க தொடங்குவார்கள்.
தகுந்த காரணம் இல்லாமல் வகுப்புகளுக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் குறித்து போலீசார் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு தகவல் கொடுப்பார்கள்.
இதேபோல சினிமா தியேட்டர்கள், பார்க்குகள் உட்பட பொது இடங்களிலும் போலீசின் கண்காணிப்பு இருக்கும்.
சந்தேகப்படும்படியாக மாணவர்கள் சுற்றுவது தெரிந்தால் உடனடியாக அவர்களை பிடித்து விசாரிப்பதும் உண்டு.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் இந்த திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தினர்.
இது வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் கேரளா முழுவதும் அமல்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.
இதற்காக பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த உள்ளூர் போலீஸ் நிலையத்துடன் கணினி மூலம் இணைக்கப்பட்டு விட்டன.
கேரள போலீசின் இந்த நடவடிக்கை மூலம் இனி தங்களது குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறார்களா என்று கவலைப்பட தேவையில்லை என பெற்றோர்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறை எச்சரிக்கை
📢📢📢📢இந்த மாத இறுதிக்குள் டிடிஎஸ் செலுத்தாவிட்டால் தினமும் 200 வீதம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை📢📢📢
Andivel May 20, 2018
பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி.
பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும். எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும்.
பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும். இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கிய குறிப்பு: இந்த பணத்தை அந்தந்த டிடிஓ- க்கள் சம்பளம் வழியாக மட்டுமே பிடித்தம் செய்தல் வேண்டும்.
💐🌺அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குளறுபடி💐🌺
அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குளறுபடி
Sunday, 20 May, 1.53 am
வேடசந்துார்;தமிழக அரசின் செயல்பாட்டில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்தே, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுவரை இத்திட்டத்தில் 5 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.22 ஆயிரம் கோடி. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் என்பவர் பல தகவல்களை கேட்டு இருந்தார்.
அதில் ஓய்வு பெற்றோரில், பங்களிப்பு ஓயவூதிய தொகை கேட்டு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். பணப்பலன் பெற்றவர்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்ட தொகை, மாதாந்திர ஓய்வூதிய திட்ட விபரங்கள் குறித்து கேட்டிருந்தார். இதற்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 8,323 பேர் விண்ணப்பித்ததில், 6,478 பேருக்கு ரூ258 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசு ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தில், மாதாந்திர ஓய்வூதியம் என்பது கிடையாது. ஒரு ஊழியரின் ஓய்வு அல்லது மறைவுக்கு பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக வழங்குவதே ஓய்வூதியம். ஆனால் ஓய்வூதியம் வழங்குவோம் என ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்து, ஓய்வூதியம் வழங்காதது நியாயமல்ல. எனவே, அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகளில் 15 நாள் கூடுதல் வகுப்பு: 170 நாளுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்த உத்தரவு
புதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது
. இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன.
அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன.
இதுகுறித்து கோபி அருகே உள்ள கொடிவேரியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.
அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, அங்குள்ள மாணவர்கள் தெலுங்கு மொழி அதிகம் பேசுவதால்தான் என்பதும், நமது ஆசிரியர்களுக்கு தெலுங்கு மொழி குறித்த பயிற்சி இல்லை என்பதும் தெரியவந்தது.
தெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கலந்து கொண்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு நான்கு வகையான சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்
பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும்.
ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது.
அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் பிளஸ்2க்கு மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்
வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வடகோட்ட தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் க.குரு நாதன் கூறியுள்ளார்.
சென்னை,
பூங்காநகர் தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவ கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை, பூக்கடை சாலை, புனித ஜார்ஜ் தபால் அலுவலகம், ஸ்டான்லி மருத்துவமனை, ஐகோர்ட்டு, ஐ.சி.எப்., பெரியார் நகர், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, மண்ணடி, மின்சார வாரியத்தில் உள்ள தபால் அலுவலகம், மிண்ட் பில்டிங், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பெரம்பூர், ரிப்பன் பில்டிங், ராயபுரம், செம்பியம், ஷெனாய்நகர், சவுகார்பேட்டை, வெங்கடேசபுரம், வேப்பேரி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தபால் அலுவலகங்களில் இந்த சேவைகள் அளிக்கப்படுகிறது.
இதில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது என்று கூறியுள்ள க.குருநாதன், ஏற்கனவே உள்ள ஆதார் விவரங்களை ரூ.30 செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.
பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைகிறது
'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான
முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது.
இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன.
தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்களை சேர்க்க, 1984ல், நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வு, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவ பல்கலையால் நடத்தப்பட்டது.
ஆனால், இந்த தேர்வில், கிராமப்புற மாணவர்களால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்ற உத்தரவாலும், நுழைவு தேர்வு முறை, 2006ல், ரத்து செய்யப்பட்டது.
நாளுக்கு நாள்
இதையடுத்து, ஒற்றை சாளர கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் முறைக்கு, பிளஸ் 2
தேர்வில், முக்கிய பாடங்களில், மாணவர்கள் பெறும்மதிப்பெண்களை கணக்கிட்டு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
எனவே, கட் ஆப் மதிப் பெண்ணை கணக்கிட்டு, இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.
இந்நிலையில், மீண்டும் நுழைவு தேர்வு வந்துள்ள தால், கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசும், நாளுக்கு நாள் குறைந்தவண்ணம் உள்ளது. மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு அமலுக்கு வந்துள்ளது.
நீட் தேர்வை எழுத, பிளஸ் 2 தேர்ச்சி யுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், பொதுப் பிரிவினர், 50 சதவீதமும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள், 45 சதவீதம், மற்ற இனத்தவர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற வேண்டும்.
'ரேங்க்' பட்டியல் தயாரிப்பில், பிளஸ் 2 தேர்வின், கட் ஆப் எவ்வளவு என்ற கேள்விக்கே இடமில்லை. நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது.
இதனால், மருத்துவத்தில், கட் ஆப் தேவை இல்லாமல் போய் விட்டது. அதேநேரம், 'பாரா மெடிக்கல்' என்ற மருத்துவ சார் படிப்புகளுக்கு, கட் ஆப் பார்க்கப்படுகிறது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க் கையை பொறுத்தவரை,மாணவர்களின் எண்ணிக் கையை விட, இரண்டு மடங்கு அதிகமாக, இடங்கள் உள்ளன. தற்போது, இன்ஜினியரிங் படிப்பிற்கு தகுதியான, கணித பாடப் பிரிவில், நான்கு லட்சம் பேர் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெறுகின்றனர்.
இவர்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், மற்ற படிப்புகளுக்கும்செல்கின்றனர். 1.50 லட்சம் மாணவர்கள், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களில், தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவர்.
மீதமுள்ள, 1.50 லட்சம் பேர் மட்டுமே, இன்ஜி., கவுன்சிலிங்குக்கு வருகின்றனர்.
அவர்களுக்கும், தேவையை விட பல மடங்கு அதிகமாக இடங்கள் உள்ளதால், கட் ஆப் இருந்தால் தான், இன்ஜினியரிங் இடம் கிடைக்கும் என்ற, தேவை இல்லாமல் போய்விட்டது.
மொத்தம் உள்ள, 550 கல்லுாரிகளில், முன்ன ணியில் உள்ள, 50 கல்லுாரிகளுக்கு மட்டுமே, கட் ஆப் மதிப்பெண் அதிகமாக தேவைப்படு கிறது.
சிலர், கட் ஆப் அதிகம் பெற்றிருந் தாலும், தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் தங்களுக்கு பிடித்த கல்லுாரியை, ஏற்கனவே முடிவு செய்து, அதில் சேர்ந்து விடுகின்றனர். எனவே, கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்த வண்ணம் உள்ளது.
10ம் வகுப்பு, 'ரிசல்ட்' தேதி : அமைச்சர் திட்டவட்டம்
கோபிசெட்டிபாளையம்: ''அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில் எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், விழிப்புணர்வு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மையத்தை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஜூன், 1ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஏனெனில்,
புதிய பாடத்திட்டத்தின் படி, குறைந்தது, 185 நாள், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது.
அதனால், ஜூன், 1ல், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவே வியக்கும் அளவில், பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதை, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
எழுத்துக்களின் அச்சு வடிவங்கள், மல்டி கலரில் படங்கள் என, மாணவர்களிடம் பயிலும் ஆர்வத்தை துாண்டும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
(மின்னல் கல்விசெய்தி)
சீருடைகளை மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், குறிப்பிட்ட தேதியில் முறையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.வரும், 23ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில், மாற்றம் இருக்கும் என செய்திகள் வெளியானதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், 'திட்டமிட்டபடி வெளியாகும்; மாற்றமில்லை' என அமைச்சர் கூறியுள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.
திறன் மேம்பாடே முக்கியம்.... மாறுகிறது கல்வித் திட்டம் தேவை மனநிலையில் மாற்றம்: சொல்கிறார்கள் உளவியல் கல்வியாளர்கள்
தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி, செயல் வழிக் கற்றல், சமச்சீர் கல்வி, முப்பருவக் கல்வி முறை என குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கற்றல் கற்பித்தலை எளிதாக்கவும் பல விதமான மாற்றங்கள் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக பள்ளி வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை மட்டுமே புத்தகத்தில் படிக்க வேண்டும்.
அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறையில் படிப்பது மிகவும் அவசியம் என்று கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இன்றைய பெற்றோர் பாடங்களை மதிப்பெண்களாக பார்க்கின்றனர். குறிப்பிட்ட பாடத்தை தனது, குழந்தைகள் படித்தால் மட்டுமே அவர்களுக்கு எதிர்காலம் உண்டு என்று நினைப்பவர்களாக உள்ளனர்.
மதிப்பெண்ணிலிருந்து பெற்றோரை மீட்பது முக்கியமான ஒன்று. அதோடு குழந்தை எதைப் படிக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் முடிவு செய்யக்கூடாது என்பது உளவியல் சார்ந்த கல்வியாளர்களின் கோரிக்கை.
இது குறித்து புதிய பாடத்திட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் இணை இயக்குனர் சசிகலா கூறியதாவது: குழந்தையின் மூளையில் கற்றல் எப்படி நடக்கிறது என்பதை, நாம் புரிந்து கொள்வது முதல்படியாகும்.
குழந்தைகள் தான் பார்க்கும், கேட்கும், உணரும் விஷயங்களை ஐந்து புலன்கள் வழியாக சேகரித்து அதனை மூளையில் பதிவு செய்கின்றனர். குழந்தைகளின் கவனித்தல் திறன் முக்கிய இடம் வகிக்கிறது.
குழந்தைகள் கவனிக்கும் விஷயங்களைப் புரிதலுக்கு உட்படுத்துகின்றனர்.
அது அர்த்தமுள்ள புரிதலாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கவனித்தல் திறன் என்பது சில நிமிடங்களே ஆகும்.
தொடர்ச்சியாக பல மணி நேரம் பாடம் நடத்துவதால், அவர்களை கவனிக்க வைக்க முடியாது. விருப்பம் இருந்தால் மட்டுமே குழந்தைகள் ஒரு விஷயத்தை கவனிக்கும்.
அதைப் பாடமாக படிப்பதையும், எழுதுவதையும் விட செய்து கற்பதில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். அதில் அவர்களின் புரிதலும் மேம்படும். செயல்வழிக் கற்றல் முறையில் குழந்தைகள் விரும்பிச் செய்கின்றனர்.
ஐம்புலன்களால் உணர்ந்து விரும்பிக் கற்கும் விஷயங்களை, குழந்தைகள் ஒரு போதும் மறப்பதில்லை. சமச்சீர் மற்றும் முப்பருவக் கல்வி முறையில் இதுவே பின்பற்றப்படுகிறது.
விரும்பிக் கற்கும் விஷயங்கள், அவர்கள் நினைவு அடுக்குகளில் பதியப்படுகிறது. பதியப்படும் விஷயங்கள் அனுபவத்தின் வழியாக, அறிவாக மாறுகிறது.
இந்த அறிவை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு தேர்வில் அளிக்கப்பட வேண்டும். தேர்வு என்பது மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பதாக இருக்க கூடாது.
ஒரு காலத்தில் மாணவர்கள் எல்லா விஷயத்தையும் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தது. இன்று தகவல்களைத் தர பலவிதமான சாதனங்கள் நம்மோடு உள்ளது.
அவற்றை பயன்படுத்துவதற்கான திறமை மட்டுமே தேவைப்படுகிறது. எந்த துறையானாலும் ‘நான் ஸ்பெஷல்’ என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.
இனி வரும் காலங்களில் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்பிருக்கும் கற்றல் முறையே குழந்தைகளுக்கு உதவும். கதைகளாக, படங்களாக, இசையாக, வீடியோவாக, விளையாட்டாக, அனிமேஷன் படக்கதைகளாக, செயல்முறையாகப் பாடம் படிப்பதும், தேர்வு எழுதுவதும் நடைமுறைக்கு வரும். அறிவைத் தீர்மானிக்கும் அளவுகோல்கள் மாறும். அதற்கு ஏற்ற மனமாற்றம் பெற்றோருக்குத் தேவை. இவ்வாறு சசிகலா கூறினார்.
-
படிவம்-1: இரண்டு விதமான (பழைய கணக்கீட்டு முறை மற்றும் புதிய கணக்கீட்டு முறை ) கணக்கீடுகளில் எது சிறந்தது என்பதை ஒரே படிவத்தில் கணக்கிட்டு ...


