FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

30 October 2019

22 October 2019

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொறுப்பாளர்களின் இன்றைய சென்னை பயணம் குறித்த விரிவான தகவல்கள்

*அனைவருக்கும்*
               *வணக்கம்*
      இன்று (22.10. 19) நமது *சிறப்புத் தலைவர்* , பொதுச் செயலாளர் திரு *அ.சுந்தரமூர்த்தி* அவர்கள், மாநிலச் செயலாளர் திரு *K.B. நரசிம்மன்* மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு *சௌத்திரி* , செயலாளர் திரு *கணேஷ்* திரு *வெங்கடே.சலு* ஆகியோருடன் இணை இயக்குநர் (மேல்நிலை) திரு *ராஜேந்திரன்* அவர்களையும், மெட்ரிக் இயக்குநர் திரு *கருப்புசாமி* அவர்களையும் , தொடக்கக்கல்வி இயக்குநர் திரு *சேதுராமவர்மா* அவர்களையும் சந்தித்து அவர்களது பணி சிறக்க பாராட்டுகளையும் , வாழ்த்துகளையும் நமது அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொண்டோம்.
         பின்னர் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு *நாகராஜ முருகன்*  அவர்களை சந்தித்து பணி நீட்டிப்பு , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு - விளக்கம் கோரப்பட்டுள்ளது உள்ளிட்ட சிலவற்றை குறித்து பேசினோம் .பள்ளிக் கல்வி இயக்குநர் திரு *ச.கண்ணப்பன்* அவர்களை சந்தித்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை 8 ப.ஆ பணியிடங்களை உறுதி படுத்திட வேண்டியுள்ள தேவைகள் குறித்தும் , த. ஆ பொறுப்பு வகித்தவர்களுக்கு கூடுதல் படி வழங்கிட நிதிக் கட்டுபாட்டு அலுவலர் அனுமதி வழங்கிடுவது  , போராட் காலத்தில் ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள 17 B யை இரத்து செய்திடுவது குறித்தும் பேசினோம்.
     பத்தாம் வகுப்பு கணிதபாட தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் பகுதி - ஈ  ல் வினா எண் 43 ஐ செய்முறை வடிவியலில் இருந்தும் , 44 ஐ வரைபடத்திலிருந்தும் மட்டுமே கேட்க வேண்டும் எனவும் .அவ்வினாக்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்றும் , வினா எண் 28 மற்றும் 42 ஆகிய கட்டாய வினாக்கள் தேர்ந்தெடுக்கும் வினாக்களாக (either or Choice ) கேட்டிட வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் திருமதி *உஷாராணி* அவர்கள் மற்றும் இணை இயக்குநர் (தேர்வு துறை )திரு *ராமசாமி* அவர்களிடமும் பேசினோம் . கன்னியாகுமரி , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மார்ச் 2019 தேர்வுப் பணிக் கான உழைப்பூதியங்கள் வழங்கப்படாமல் இருப்பது குறித்தும்     பேசியுள்ளோம்.
          விரைந்து இது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறியுள்ளார்கள்.
        SCERT இணை இயக்குநர் திரு *செயக்குமார்* அவர்களை சந்தித்து வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேசியுள்ளோம் என்பதனன தங்களது
தகவலுக்காக ...

                  இவண்
      *கி. மகேந்திரன்*
         மாநிலத் தலைவர் .