நமது இயக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்து பட்டதாரிகளுக்கான கோரிக்கைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பேசினார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் பாடச்சுமை கருதி 8 பட்டதாரி ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் வலியுறுத்தி பேசினார். 17 B ரத்து செய்திட கோரியும் சமூக அறிவியல் பாடத்திற்கான ஏழு பாடவேளைகள் ஒதுக்க வேண்டியும், 2008 க்குப் பிறகு தொலைதூரக் கல்வி மற்றும் பகுதி நேரத்தில் எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு கோவை தணிக்கை தடை விதித்ததை ரத்து செய்து தரக் கோரியும், 2004_ 2006 ஒப்பந்தப் பணி காலத்தினை பணி வரன்முறை செய்திடவும் இன்னும் பிற ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
FLASH NEWS:
Subscribe to:
Post Comments (Atom)
-
படிவம்-1: இரண்டு விதமான (பழைய கணக்கீட்டு முறை மற்றும் புதிய கணக்கீட்டு முறை ) கணக்கீடுகளில் எது சிறந்தது என்பதை ஒரே படிவத்தில் கணக்கிட்டு ...




No comments:
Post a Comment