FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

1 April 2018

பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை'

பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை'

- March 31, 2018

கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளிகளிலும்சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோவையில் நேற்று கூறியதாவது:மத்திய அரசின், 'நீட்' தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் திறனுடன் சந்திக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு முடிந்த பின், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, 4,000 மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, முன்னுரிமை அளித்து, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு, ஒன்பது கல்லுாரிகளில் தனிப்பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிகள் மூலம், மருத்துவ துறை மட்டுமில்லாமல், எந்த துறையிலும் தேர்வை சந்திக்கும் துணிவை, மாணவர்களிடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வுக்கு பின், 'நீட்' தேர்வு பற்றி மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் அரசு பள்ளிகளை போல், தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

31 March 2018

23.08.2010 பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெறுதல் குறித்தும் , தகுதிகாண் பருவம் குறித்தும் இயக்குநர் தெளிவுரை



ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்*

[3/31, 7:03 PM]  *ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்*

ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

 
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களாக 3,170 உள்ளன.

சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டன.

இந்த உபரி பணியிடங்களில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 541 பணியிடங்கள் காலியாக உள்ளன.

1,992 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.

இதனால் 3,170 காலிப்பணியிடங்கள், 1,178 ஆக குறையும்.

மேலும் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதன்மூலம் 2,018 காலியிடங்களே ஏற்படும்.

இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடக்க உள்ளது.

தொடக்கக் கல்வித்துறையில் ஒன்றிய சீனியாரிட்டியே கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
[3/31, 7:05 PM] MRG: *🔴அடுத்த_அடி..*

குறைவான மாணவர்களைக்கொண்ட பள்ளிகள் இணைக்கப்படும்.
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறையும்...

சர்வசிக்ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு


மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.


அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.


இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

30 March 2018

TNGTA DINDIGUL Mutual transfer whatsapp group

திண்டுக்கல் மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் பெற விரும்புபவர்கள் மட்டும் இந்த இணைப்பைப் பயன்படுத்தி இக்குழுவில்  இணைந்து தங்கள் விவரங்களை பதிவிட்டு பயன்பெறவும்.

இக்குழுவில் பதிவிடுவோர் முழு விவரங்களுடன் தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரி மற்றும் மாறுதலில் செல்ல விரும்பும் பகுதியை தெளிவாக குறிப்பிட்டு ஒரே செய்தியாக அனுப்பவும்

தங்களின் தொடர்பு எண்ணையும் சேர்த்து பதிவிடுங்கள். இந்த செய்தியை மற்ற குழுக்களுக்கு அனுப்பும் போது தங்களை தொடர்பு கொள்ள எளிமையாக இருக்கும்.

குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் இணையதள துவக்க விழா மற்றும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு-நாளிதழ் செய்தித் துளிகள் 30.03.2018

Neet study meterial

20 March 2018

Ict 4 tamil teachers

தமிழாசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி - ICT4TAMIL.

தமிழ் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி தமிழை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4TAMIL"  என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

"ICT4TAMIL" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும். 

அனைத்து தமிழ் ஆசிரியர்களும் "ICT4TAMIL" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.

LINK:

https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vallaba1979.ICT4TAMIL

19 March 2018

TNGTA ,திண்டுக்கல் மாவட்டம்

அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியகளுக்கு வணக்கம்.இன்று 19.03.18 மாலை  நமது CEO அவர்களை நமது இயக்க பொறுப்பாளர்கள் சந்தித்து  தேர்வுப்பணி தொலைவில் உள்ளவர்களுக்கும்,Mutual லில் உள்ளவர்களுக்கும் மாற்றித்தரக்கோரி. TNGTA கழகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.மனுவை பரிசீலித்து CEO அவர்கள் உறுதியாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.___இவண் TNGTA ,திண்டுக்கல் மாவட்டம்.

14 March 2018

பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

*🛑🛑🛑பள்ளி கல்வித் துறையில் மாற்றம்; அரசு முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு*


பள்ளிக் கல்வித் துறை யில், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள தற்கு, ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு ஆய்வாளர்; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி இருப்பர். தொடக்க கல்வியில், மாவட்டத்துக்கு குறைந்தபட்சம், இரண்டு தொடக்க கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், மூன்று வகை நிர்வாகங்களை கலைத்து விட்டு,ஒரே ஒரு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பதவியை மட்டும் வைத்திருக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வட்டாரஅளவில், அனைத்து அரசு மற்றும் தனியார் நர்சரி, மெட்ரிக், மேல்நிலை பள்ளி களின் நிர்வாகங்களை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரி கவனிப்பார். இந்த திட்டத்தால், ஏ.இ.இ.ஓ.,க்கள், தற்போது கவனிக்கும், தொடக்க பள்ளி நிர்வாகத்தை மட்டுமின்றி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும்.

அதனால், வேலைப்பளு பல மடங்கு அதிகரிப்பதுடன், நிர்வாக பணிகளை முடிக்க, காலதாமதம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போதைய நிலையில், மூன்று இயக்குனரகத்துக்கும் தனியாக, மாவட்ட அளவில் அதிகாரிகள் இருப்பதே தொடர வேண்டும்.

அதிகாரிகள் எண்ணிக்கையை குறைத்து, ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு மட்டும், முழு அதிகாரத்தை கொடுத்தால், யார் பெரியவர் என்ற, அதிகார பிரச்னையும் அதிகரிக்கும்.ஏ.இ.இ.ஓ., பதவி என்பது, கீழ்நிலையில் உள்ள பதவி. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஏ.இ.இ.ஓ.,க்களை விட சீனியர்களாக இருப்பதால், முரண்பாடுகள் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

13 March 2018

மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு - SBI அதிரடி


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இந்த புதிய கட்டணக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.


அதன்படி, ஸ்டேட் வங்கி அபராதம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 8 மாதங்களில் அந்தவங்கி ரூ.1,717 கோடி அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது. ஆனால், ஸ்டேட் வங்கியில் ஜூலை-செப்டம்பர் மாத காலாண்டு லாபமே ரூ.1,581 கோடிதான். இந்த செய்தி வெளியான பின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது, ஏராளமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தொடர் எதிர்ப்பு, அதிருப்தி காரணமாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் குறைத்து எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.


அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.
ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கையால், ஏறக்குறைய 25 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.

இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குநர் பி.கே. குப்தா கூறுகையில் ‘ வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் அபராதக் கட்டணத்தை குறைத்துள்ளோம். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எங்களின் முயற்சிகள், நடவடிக்கை அனைத்தும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே’ எனத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கை:

குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்காத, மெட்ரோ மற்றும் பெருநகர பகுதி வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்பட்ட அபராத தொயைான ரூ.50 (ஜிஎஸ்டி தனி) ஆனது, ரூ.15 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசூலிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.40 (ஜிஎஸ்டி தனி) முறையே ரூ.12 (ஜிஎஸ்டி தனி) மற்றும் ரூ.10 (ஜிஎஸ்டி தனி) ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும், 25 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறியுள்ளது.