FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

8 July 2018

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும்.


வருகிற 15 -ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாட்ஸ்அப்-ல் இதுபோல் வந்தால் திறக்க வேண்டாம்! பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் எச்சரிக்கை!!



சமூக வலைத்தளங்களின் மூலம் உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கும் முயற்சியாக, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது.


சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.


குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, குழந்தைகள் கடத்தல் கும்பல் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல் மற்றும் வதந்தியால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறையும் உயிரிழப்பும் ஏற்படுகிறது .


இவ்வாறு தவறான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது.



மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றரிக்கை மூலம் ''சமூகவலைத்தளங்கள் மூலமாக உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கு அளவிற்கு, மாநில அரசுகள் முன்கூட்டியே அதனை அறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''. என அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது.


இந்நிலையில், போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை தடுக்க, வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை முயற்சி நடைபெற்றுவருகிறது.


இந்த புதிய அம்சத்தில், போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக ''வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில், குறுந்தகவல்களில் இருக்கும் வலைத்தள முகவரி கொண்டு, அது உண்மையா? இல்லை போலியானதா என்பதை தானே கண்டறிந்து, அந்த செய்து பொய் எனில் ''Suspicious Link'' {சஸ்பீஷியஸ் லின்க்} என சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை செய்யும்.


இந்த வசதி தற்போது, ''வாட்ஸ்அப் பீட்டா 2.18.204'' வெர்ஷனில் மட்டும் உள்ளது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இனி இந்த புதிய அம்சத்தில் பொய்யான செய்திகளை காண்பித்து குடுக்கும், ''Suspicious Link'' {சஸ்பீஷியஸ் லின்க் -சிவப்பு நிறத்தில்} கொடுக்கும் எச்சரிக்கையை பயன்படுத்தி. போலி செய்திகளை தவிக்கலாம்.

கொடைக்கானலில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் பயிற்சி பட்டறையின் 08.07.18 இன்றய தொடக்கம்.






28 June 2018

Penalty on late filing of income tax return under section 234F Rs.1,000 to Rs.10,000


'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அரசு பள்ளிகளில் அடைக்கலம்


குறைந்த மதிப்பெண் எடுப்பதால், தனியார் பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும்
மாணவர்கள், அரசு பள்ளிகளில் இடம் கேட்டு, தஞ்சம் அடைந்துள்ளனர்.
'பொது தேர்வில் அதிக மதிப்பெண்; 100 சதவீத தேர்ச்சி' என, தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த போட்டியால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, தங்கள் பள்ளிகளில் இருந்து, கட்டாயமாக வெளியேற்றி, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, 100 சதவீத தேர்ச்சியை, தனியார் பள்ளிகள் உறுதி செய்கின்றன.குறிப்பாக, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாற்று சான்றிதழை கொடுத்து, வெளியேற்றப்படுகின்றனர்.

இந்த ஆண்டில், பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும், பள்ளிகள் வெளியேற்றி வருகின்றன. கட்டாய வெளியேற்றம், இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.மாநிலம் முழுவதும், ஏராளமான மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களை, மற்ற தனியார் பள்ளிகளும் சேர்த்து கொள்ளாததால், அரசு பள்ளிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.இந்த மாணவர்கள், அரசு பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ள பள்ளிகளில் சேர, போட்டிபோடுகின்றனர்.

அரசு பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தால், தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை, எந்த பிரச்னையும் இன்றி சேர்த்து கொள்ள வேண்டும். ஆங்கில வழியில் இடம் இல்லா விட்டால், தமிழ் வழியில் அவர்களை சேர்த்து, பிளஸ் 2 வரை படித்து முடிக்க, ஏற்பாடு செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


கறுப்பு பட்டியல் தயாரிப்பு : தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், எந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டனர் என்பதை கடிதமாக பெற, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

 இந்த கடிதங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், கறுப்பு பட்டியலாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறும் பள்ளிகள் மீது, மெட்ரிக் இயக்குனரகமும், தேர்வுத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 'மாணவர்கள் யாராவது கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், அதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரி, பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள் ஆகியோரிடம், எழுத்துப்பூர்வமாக பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

4 June 2018

🌷🌷புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்🌷🌷Vel

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.அரசுத்துறையில், 2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள, ஐந்து லட்சம் பேருக்கு, மாத ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை இல்லை. பணிக்காலம் முடிந்ததும், மொத்த, 'செட்டில்மென்டாக' பணப்பலன் வழங்கப்படுகிறது.இதன் காரணமாகவே, இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி, போராட்டங்கள் தொடர்கின்றன.இது குறித்து, தகவல் உரிமை சட்டத்தில் தகவல் பெற்ற ஆசிரியர், பிரெட்ரிக் கூறுகையில், ''2003க்கு பின் பணியில் சேர்ந்து, மரணம், ஓய்வு, பணித்துறப்பு பிரிவுகளில், ஓய்வூதிய பலன்கள் கோரி, 8,323 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், 6,478 பேருக்கு, 258.91 கோடி ரூபாய் ஓய்வூதிய பணப்பலன் வினியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன.''மேலும், கருவூலத் துறையில், துறைவாரியான தகவல்கள் இல்லை என்றும், மாதந்திர ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆணைகள் பெறப்படவில்லை என்றும், தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.