FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

22 July 2018

உயர்திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப - பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள்....

உயர்திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப - பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள்....
எங்கள் ஊர்காரர் என்பதில் பெருமையே....

கல்வித்துறைச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உயர்திரு. உதயச்சந்திரன் அவர்களின் பழைய நேர்காணல் ஒன்று இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது....

உயர்திரு உதயச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரம் அருகே இருக்கும் இன்று நாமக்கல் நகரோடு இணைந்த சின்னமுதலைப்பட்டி என்ற சிறிய ஊரில் பிறந்தவர்.. நடுத்தரக் குடும்பம். நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு  படித்தவர், அவர் படித்த சமயத்தில் அவருடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ‘பஞ்சாப் மாநில முதல்வர் யார்?’ என்கிற ரீதியில் பொது அறிவு கேள்விகளைக் கேட்டுத்தான் பாடங்களை அடுத்து ஆரம்பிப்பாராம். அந்த ஆசிரியருக்கு பதில் சொல்வதற்காகவே தினமும் நாளிதழ்களை வரிவிடாமல் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டதாக நினைவில் வைத்துச் சொல்லியிருந்தார்.

அதுதான் உதயச்சந்திரனுக்கு பொது அறிவு மீது ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. நேர்காணலைப் படித்த அன்றிலிருந்து

இன்று வரையிலும் உதயச்சந்திரனைவிடவும் அந்த ஆசிரியர் மனதுக்குள்ளேயே நிற்கிறார்.

ஆசிரியருக்கு ‘இவன் கலெக்டர் ஆவான்’ என்று தெரிந்திருக்காமல் இருக்கலாம். பாடம் நடத்துவது மட்டும்தான் அவரது கடமை. ‘முதல்வர் யார்?’ என்று கேட்பது கடமையைத் தாண்டி அவர் கொளுத்திய ஒரு திரி. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு நிமிடத்தை அவர் இதற்காக ஒதுக்கியிருக்கக் கூடும். அந்த ஒரேயொரு நிமிடம் சமூகத்திற்காக, தனது மாணவர்களுக்காக சிந்தித்திருக்கிறார் அல்லவா? அது இன்றைக்குத் தமிழகத்தின் முக்கியமான ஆளுமையை உருவாக்கியிருக்கிறது. ஆசிரியர்களுடன் பேசுகிற வாய்ப்பு கிடைக்கும் போது இந்த உதாரணத்தை சுட்டிக்காட்டுவதுண்டு. தினசரி ஐந்து நிமிடம் ஆசிரியர்கள் தமது கடமையைத் தாண்டிச் சிந்தித்தால் போதும். அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கிவிடக் கூடும். மாதாவுக்கும் பிதாவுக்கும் பிறகு குருதான் என்று சொன்னதில் அர்த்தமில்லாமல் இல்லை.

உதயச்சந்திரன் ஈரோடு மாவட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படித்தவர். அப்பொழுதிருந்தே அவரது கனவு ஐ.ஏ.எஸ். நம் ஊரில்தான் வித்தியாசம் பார்க்காமல் சகலரையும் கலாய்ப்பார்கள் அல்லவா? உதயச்சந்திரனை மட்டும் விடுவார்களா? அவர் தங்கியிருந்த கல்லூரியின் விடுதி அறையில் சக மாணவர்கள் நக்கலாக ‘ஜில்லா கலெக்டர்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகாக தமது கல்லூரிக்குச் செல்கிறார். பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காகக் தான் தங்கியிருந்த அதே விடுதி அறைக்குச் சென்று பார்க்கிறார். அப்பொழுதும் ‘ஜில்லா கலெக்டர்’ என்ற எழுத்துக்கள் மங்கிப் படிந்திருந்திருக்கின்றன. ஆனால் அப்பொழுது அவர் அதே ஈரோடு மாவட்டத்துக்கு உண்மையிலேயே ஜில்லா கலெக்டர் ஆகியிருந்தார். மிக இளம்வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வென்றவர்களில் உதயச்சந்திரனும் ஒருவர். 1995 ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியுற்ற போது அவரது வயது 23.

ஈரோடு மாவட்டத்திற்கு எப்பொழுதுமே ஒரு ராசி உண்டு. உதயச்சந்திரன் மாதிரியான அட்டகாசமான ஆட்சியர்கள் அத்திப்பூத்தாற்போல வந்துவிடுவார்கள்.

சமீபத்தில் எங்கள் ஊரைச் சார்ந்த பனைமரம் ஏறு தொழிலாளியின் மகன் ஒருவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். குடும்பத்தில் வறுமை. அப்பனைச் சிரமப்படுத்தாமல் ஏதாவதொரு படிப்பில் சேரலாம் என்று நினைத்திருக்கிறார். அப்பொழுது உதயச்சந்திரன்தான் ஈரோடு மாவட்ட ஆட்சியர். அந்தச் சமயத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். வங்கிகள் தயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ரூபாய் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கல்விக்கடனாக விநியோகம் செய்ய வழிவகை செய்து கொடுத்தவர் அவர்தான். அதில் பலனடைந்தவர்களில் பனைமரத் தொழிலாளியின் மகனும் ஒருவர். இப்பொழுது இஸ்ரோவில் பணியில் இருக்கிறார். ‘கலெக்டர் கல்வித்துறைக்கே வந்துட்டாரு’ என்று அவ்வளவு பூரிப்பு அவருக்கு.

உரமானியம் என்ற பெயரில் அரசாங்கம் உர நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட நிறுவனங்களிலிருந்து விவசாயிகளுக்கு உரங்கள் நேரடியாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய ‘விவசாயிகளுக்கே நேரடியாக பணத்தைக் கொடுத்துடுங்க..என்ன உரம் வாங்கணும்ன்னு அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்’ என்று கமிஷன் அடித்துக் கொண்டிருந்தவர்களின் கண்களைக் கட்டி காட்டுக்குள் விட்டார். எங்கள் ஊர் விவசாயிகள் இன்னமும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஆட்சியராக இருந்த காலத்தில் வறட்சி நிலவும் பகுதிகளில் சொட்டு நீர் பாசனத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம், நூலகங்களை மேம்படுத்தி பராமரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்டவற்றை இன்னமும் ஊர்ப்பக்கம் பேசிக் கொண்டிருக்கிற ஆட்களைப் பார்க்க முடியும். இப்படி கிராமப்புற மேம்பாடு, கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல தளங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் உதயச்சந்திரன்.

மதுரை மாவட்டத்தில் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை மறந்திருக்க முடியாது. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பஞ்சாயத்துக்களாக மாற்றப்பட்ட பிறகு தேர்தலே நடத்தவிடாமல் செய்து கொண்டிருந்தார்கள். மீறி தேர்தல் நடத்தினால் பதவியேற்ற அதே தினத்தில் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள். அந்தச் சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி தலைவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களைத் தொடரச் செய்ததும் உதயச்சந்திரன்தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவுக்கு பிரச்சினை வந்த போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்து ஜல்லிக்கட்டுவை நடத்தினார்.

உதயச்சந்திரன் குறித்து நிறையச் சொல்ல முடியும். வெறுமனே அவரைப் புகழ்வது நோக்கமில்லை.

உதயச்சந்திரன் கல்வித்துறைச் செயலாளராக பதவியேற்கிறார் என்று தெரிந்தந்திலிருந்தே மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அதிகளவிலான சீரமைப்புத் தேவைப்படுகிற துறை அதுதான் அல்லவா?. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார மட்டத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாக அரசுப்பள்ளிகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, மிரட்டக் கூடாது என்று ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மாணவர்களைச் சித்ரவதை செய்வார்கள். மாணவர்களை ப்ராய்லர் கோழிகளாக மாற்றி இரவு பகல் பாராமல் கண்விழிக்கச் செய்து மதிப்பெண்களைக் கக்க வைத்துவிடுவார்கள். நம் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதன் முக்கியமான காரணமே இதுதான். ‘அங்க மார்க் வாங்க வெச்சுடுறாங்க’ என்பார்கள்.

ஏன் வாங்க வைக்க முடியாது? தனியார் பள்ளிகளில்தான் ப்ளஸ் ஒன்னிலிருந்தே ப்ளஸ் டூ பாடத்தைத்தானே படிக்கிறார்கள். இரண்டு வருடங்களாக உருவேற்றப்படும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்களா அல்லது ஒரேயொரு வருடம் மட்டும் எந்தக் கண்டிப்புமில்லாமல் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்குவார்களா? இத்தகைய தகிடுத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பதினொன்றாம் வகுப்பையும் பொதுத்தேர்வாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் டூவில் மட்டும் படிக்கட்டும். அற்புதமான நடவடிக்கை இது. ஆயிரம் கும்பிடு போடலாம்.

தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படும் சலுகைளை ஒழுங்குபடுத்தி வழிக்குக் கொண்டுவந்தாலே போதும். அரசுப்பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிடவும் எந்தவிதத்திலும் மோசமானவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கைகளை அவிழ்த்துவிட வேண்டும். மாதம் ஒரு முறையாவது ‘பயிற்சி’ என்று அவர்களை அழைத்து வைத்து கல்வி அதிகாரிகள் தாளிக்கிறார்கள். ஆசிரியர்களிடம் பேசினால் கதறுகிறார்கள். பெரும்பாலானவை தேவையற்ற பயிற்சிகள் அல்லது தூக்கம் வரவழைப்பவை. ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு உருப்படியான பயிற்சிகளைக் கொடுத்தால் போதும். பயிற்சியரங்கில் எதைச் சொல்லித் தர வேண்டும், சொல்லித்தருகிற ஆளுமை யார் என்பதையெல்லாம் தெளிவுடன் வடிவமைத்து பயிற்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் கவனம் செலுத்தச் செய்வதுதான் இன்றைக்கு முக்கியமான காரியமாகத் தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இப்பொழுதெல்லாம் ஊழியர்களுக்கான பயிற்சிகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றன. பயிற்சிகளின் எண்ணிக்கையைவிடவும் effective என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதையே அரசுத்துறைகளும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

உதயச்சந்திரன் சவாலான தருணத்தில்தான் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக தமிழக பாடத்திட்டங்களை மாற்றுவது, நீட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் தடைகளைக் கண்டறிதல் (Gap analysis) என நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவரால் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர்களின் சங்கங்களை அனைத்து ‘இந்தத் துறையில் என்ன தேவை?’ என்று எழுத்துப் பூர்வமாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். மேல்மட்ட அதிகாரியொருவர் இறங்கி வந்து பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான எத்தனங்களைத் தொடங்குவதே பாஸிடிவ்வான விஷயம்.

 கல்வித்துறையில்  அமைச்சராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே பல துறை அமைச்சர் பதவிகளில் இருந்து அனுபவம் பெற்ற மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும்... செயலாளராக  நம் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்  இயக்குநர்களாக செ.கார்மேகம், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இணைந்த அற்புதமான அணி அமைந்திருக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தை அரசு வழங்கினால் பெருமளவு சீரமைப்புகளைச் செய்துவிடுவார்கள். நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தமக்குக் கீழாக இத்தகையதொரு அணியை அமைத்துக் கொண்ட அமைச்சருக்கும் வாழ்த்துக்கள். கல்வித்துறையைக் காப்பாற்றுங்கள் அய்யா! இன்றைக்கு அதுதான் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

இவருடைய பேட்சில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி அதிகாரிகளாக வந்த 45 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஒற்றுமையுடன் எந்தொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இந்திய அளவில் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது மிகவும் பெருமையான செய்தியாகும்....
நன்றி ஐயா!!!
வாழ்த்துக்கள்....
உங்கள் பணி மேலும் மேலும் சிறக்கட்டும்...
முனைவர் டி.எம். மோகன்.
தலைவர், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை.
நாமக்கல்...

20 July 2018

TNGTA VedaSandur

 இன்று மரியாதை நிமிர்த்தமாக வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் அவர்களை தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க  பொறுப்பாளர்கள் மரியாதை.  நிமிர்த்தமாக சந்தித்த போது

18 July 2018

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNGTA) மாநில கழக தகவல்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வழிகாட்டியும்,மாநில சிறப்புத்தலைவர் திரு.T.S @ T.சுப்ரமணியன் ஐயா அவர்களும், மாநிலத் தலைவர் திரு.கி.மகேந்திரன் அவர்கள்,மாநில பொதுசெயலாளர் திரு.அ.சுந்தரமூர்த்தி அவர்கள்,திரு.ஜான் உபால்ட், மற்றும் நான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு. இராமேஸ்வரமுருகன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள பிரப்சனை மற்றும் வழக்குகள் குறித்தும்

6 முதல் 10 வகுப்புகள் வரை பாடம் போதிக்கும்  உரிமை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கவும் முதுகலை ஆசிரியர்களை 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு பாட வேலைகளை ஒதுக்குவதையும் அதனால் பட்டதாரி ஆசிரியர்களை உபரியாக்கி வெளியேற்றுவதை உடனடியாக கைவிடவும்

பணி நிரவல் விதிமுறை வருடத்திற்கு ஒரு முறை மாற்றாமல் பொதுவான விதிகளை வகுத்திடவும்,

விடுமுறை நாட்களில் பயிற்சிகள் வழங்குவது குறித்தும்,

பல மாவட்டங்களில் மனமொத்த மாறுதல் ஆணை இன்னும் வழங்கப்படாததை குறித்து கேட்ட பொழுது 31 - 07-2018க்குள் ஆணை வழங்குவதாக உறுதியளித்தார்.

சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு 7 பாட வேலைகளுக்கும் அவர்களிக்கு 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததையும் குறித்து மனு அளிக்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தெலுங்கு  கண்ணடம் போன்ற மொழிகளில் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு.குப்புசாமி அவர்கள் மற்றும் திரு. இராதாகிருஷ்ணன் இணை இயக்குநர் (மே.நி.கல்வி) அவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக சந்தித்தோம்.

            இவண்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNGTA)
Thank you Alex.

9 July 2018

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு

தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.மாற்றம் என்ன? தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்

 10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார் மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார் தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

8 July 2018

பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஆசிரியர்களே! போவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க...

Dear trs,
தங்களது பயிற்சி வகுப்பில் பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

#. பங்கேற்கும் ஆசிரியர்களின் android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளது எனவும்

Phone internal memory குறைந்தது 1GB space உள்ளது எனவும்

4G internet speed போதுமான அளவில் உள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

# url link , bar code, Qr code ஆகிய மூன்று வழிகளில் நமக்கு தேவையான website க்கு செல்ல முடியும். இவற்றில் QR code முறை எளிது மேலும் அவ்வப்போது contentகளை update செய்ய முடியும் எனவே நமது பாடப்புத்தகங்களில்  QR code என்னும் Quick response codeகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

# QR codeகளை scan செய்ய நமது smart phoneல் inbuiltஆக இருக்கும் QR code scanner ஐ பயன்படுத்தி கொள்ளலாம்

அல்லது

Play store வழியாக Cam Scanner appஐ installசெய்து scan செய்யலாம்

அல்லது

Diksha app ஐ installசெய்து அதில் உள்ளscanner மூலமாகவும் scan செய்ய முடியும்.

எந்த scanner மூலம் scan செய்தாலும் contentகள் Diksha app மூலம் மட்டும் தான் play ஆகும் எனவே Diksha appஐ installசெய்வது சிறந்தது.

# QR codes 3 விதமாக உள்ளன.
1. முழு பாடப்புத்தகம் ebook

2. கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் AV Aids.

3. மதிப்பீட்டு பயிற்சி Evaluation/Assessment activities
 
இவற்றில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Diksha app மூலம் download ஆன files, ecar files ஆக save ஆகியிருக்கும். இவற்றை file manager மூலம் பார்க்க முடியாவிட்டால் ES File explorer app ஐ installசெய்து அதில் ecar என type செய்து search செய்தால் நம்மால் அவற்றை பார்க்க, play மற்றும் share செய்து கொள்ள முடியும்.

# smart phone இல்லாமல் laptop / desktop pc மூலம் QR code scan செய்ய

நமது computerல் முதலில் பாடப்புத்தகத்தை ( ebook ) pdf file ஆக download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Computerல் Cam scanner software ஐ install செய்து நமது web camera மூலம் QR code ஐ scan செய்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Web camera இல்லாமல் scan செய்ய QR code scanner for Windows என்ற softwareஐ install செய்து அதன் மூலம்QR codeஐ selectசெய்து url link ஐ copyசெய்து அதை Google chromeல் paste செய்தும் contentஐ open செய்ய முடியும்.

Computer மூலம் இவ்வாறு QR code ஐ scan செய்வது கடினம் என நினைத்தால் Google Chrome ல் www.diksha.gov.in என type செய்து Diksha websiteல் நுழைந்து அதில் content explorerஐ     select செய்து அதில் syllabusக்கு State board Tamil nadu எனவும் medium, subject, class ஆகியவற்றை சரியாக select செய்து search செய்தால்
நமது பாடப்புத்தகத்தில் உள்ள content resources அனைத்தும் display ஆகும். அதில் இருந்து நமக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து view/play செய்து கொள்ள முடியும். இதற்கு smartphone தேவை இல்லை.

# நமது அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் Internet கண்டிப்பாகத் தேவை.

ஆசிரியர்கள்..... சமுதாய சிற்பிகள் ...கண்டிப்பாக ஒவ்வொரு மாணவர்களும் , பெற்றோரும் பார்க்க வேண்டிய காணொளி .


G.o (2d) 13

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த தமிழக அரசு வலியுறுத்தும்.


வருகிற 15 -ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு முறை அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாட்ஸ்அப்-ல் இதுபோல் வந்தால் திறக்க வேண்டாம்! பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் எச்சரிக்கை!!



சமூக வலைத்தளங்களின் மூலம் உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கும் முயற்சியாக, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது.


சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.


குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, குழந்தைகள் கடத்தல் கும்பல் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல் மற்றும் வதந்தியால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறையும் உயிரிழப்பும் ஏற்படுகிறது .


இவ்வாறு தவறான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது.



மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றரிக்கை மூலம் ''சமூகவலைத்தளங்கள் மூலமாக உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கு அளவிற்கு, மாநில அரசுகள் முன்கூட்டியே அதனை அறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''. என அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது.


இந்நிலையில், போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை தடுக்க, வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை முயற்சி நடைபெற்றுவருகிறது.


இந்த புதிய அம்சத்தில், போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக ''வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில், குறுந்தகவல்களில் இருக்கும் வலைத்தள முகவரி கொண்டு, அது உண்மையா? இல்லை போலியானதா என்பதை தானே கண்டறிந்து, அந்த செய்து பொய் எனில் ''Suspicious Link'' {சஸ்பீஷியஸ் லின்க்} என சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை செய்யும்.


இந்த வசதி தற்போது, ''வாட்ஸ்அப் பீட்டா 2.18.204'' வெர்ஷனில் மட்டும் உள்ளது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இனி இந்த புதிய அம்சத்தில் பொய்யான செய்திகளை காண்பித்து குடுக்கும், ''Suspicious Link'' {சஸ்பீஷியஸ் லின்க் -சிவப்பு நிறத்தில்} கொடுக்கும் எச்சரிக்கையை பயன்படுத்தி. போலி செய்திகளை தவிக்கலாம்.

கொடைக்கானலில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் பயிற்சி பட்டறையின் 08.07.18 இன்றய தொடக்கம்.






28 June 2018

Penalty on late filing of income tax return under section 234F Rs.1,000 to Rs.10,000


'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அரசு பள்ளிகளில் அடைக்கலம்


குறைந்த மதிப்பெண் எடுப்பதால், தனியார் பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும்
மாணவர்கள், அரசு பள்ளிகளில் இடம் கேட்டு, தஞ்சம் அடைந்துள்ளனர்.
'பொது தேர்வில் அதிக மதிப்பெண்; 100 சதவீத தேர்ச்சி' என, தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த போட்டியால், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை, தங்கள் பள்ளிகளில் இருந்து, கட்டாயமாக வெளியேற்றி, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே, 100 சதவீத தேர்ச்சியை, தனியார் பள்ளிகள் உறுதி செய்கின்றன.குறிப்பாக, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாற்று சான்றிதழை கொடுத்து, வெளியேற்றப்படுகின்றனர்.

இந்த ஆண்டில், பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும், பள்ளிகள் வெளியேற்றி வருகின்றன. கட்டாய வெளியேற்றம், இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது.மாநிலம் முழுவதும், ஏராளமான மெட்ரிக் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களை, மற்ற தனியார் பள்ளிகளும் சேர்த்து கொள்ளாததால், அரசு பள்ளிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.இந்த மாணவர்கள், அரசு பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ள பள்ளிகளில் சேர, போட்டிபோடுகின்றனர்.

அரசு பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தால், தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை, எந்த பிரச்னையும் இன்றி சேர்த்து கொள்ள வேண்டும். ஆங்கில வழியில் இடம் இல்லா விட்டால், தமிழ் வழியில் அவர்களை சேர்த்து, பிளஸ் 2 வரை படித்து முடிக்க, ஏற்பாடு செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


கறுப்பு பட்டியல் தயாரிப்பு : தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், எந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டனர் என்பதை கடிதமாக பெற, ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

 இந்த கடிதங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், கறுப்பு பட்டியலாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறும் பள்ளிகள் மீது, மெட்ரிக் இயக்குனரகமும், தேர்வுத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 'மாணவர்கள் யாராவது கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், அதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரி, பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள் ஆகியோரிடம், எழுத்துப்பூர்வமாக பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.