FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

20 May 2018

மத்திய அரசு அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றம்



           




சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.



 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுதுபவர்களுக்கு முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்படும்.



 அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும்.



நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண், மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்படும்.

இது தான் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.



இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள் கடுைமயாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



 குறிப்பாக கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் கூறியதாவது:


 சிவில் சர்வீஸ் தேர்வில் மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை சேர்த்து பணிகள் ஒதுக்கப்படும். அதாவது அவர்களுக்கு ஐஏஎஸ் பணி ேவணுமா, ஐ.பி.எஸ். பணி வேணுமா என்பது ஒதுக்கப்படும்.



எந்த மாநிலத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்பதையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



அதாவது, மத்திய அரசு ஒரு யோசனையை கேட்டுள்ளது. அதாவது மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முசௌரிக்கு வர வேண்டும்.

அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அந்த பயிற்சிக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.



அந்த மதிப்பெண்களை சேர்த்து ஐஏஎஸ், ஐபிஎஸ் பணி கிடைக்குமா? என்பதை முடிவு செய்வோம். எந்த மாநிலத்திற்கு போகிறீர்கள் என்பதும் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



 இதன் மூலம் முசௌரியில் உள்ள 10 பேராசிரியர்கள் நினைத்தால் போதும் முதல் மதிப்பெண் எடுத்தவரை 900வது ரேங்கில் கொண்டு போய் வைக்க முடியும். அதே போல் குறைந்த மதிப்பெண் எடுத்தவரை போய் முதல் மதிப்பெண்ணுக்கு கொண்டுவர முடியும்.



 யார் எந்த பதவிக்கு செல்ல வேண்டும் என்பதை சிலர் முடிவு செய்யும் நிலை ஏற்படும். எந்த மாநிலத்திற்கு கொண்டு போக வேண்டும் என்பது நடக்கும்.


இதனால் யு.பி.எஸ்.சி.க்கு உள்ள மரியாதை கெடுக்கப்படும். இது நடைமுறை சிக்கல் மட்டுமல்லாமல், அநீதியின் உச்சக்கட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


மாணவர்கள் ஆதங்கம்
இது குறித்து ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி பெரும் மாணவர்கள் கூறியதாவது: பயிற்சியில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பணிகள் ஒதுக்கப்படும் என்பதை எந்த மாணவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.



இதனால், முறைகேடுகளும், வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் தான் ஆதிக்கம் செலுத்தும் நிலை தான் ஏற்படும். இதற்காக கஷ்டப்பட்டு படித்து வருபர்களின் ஐஏஎஸ், ஐ.பி.எஸ். கனவு கனவாகவே போய்விடும். எனவே மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்த கூடாது. இதை ஆரம்பித்திலேயே எதிர்க்க வேண்டும்.



புதிய பாடத் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்த நடவடிக்கை: கவுன்சிலின் செயல்பாடுகள் மாற்றியமைப்பு




ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்யும் வகையிலும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ("எஸ்சிஇஆர்டி') செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவு*


தமிழகத்தில் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்களுக்கும், ஏற்கெனவே பணியில் உள்ளோருக்கும் தேவையான பயிற்சிகளை மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளித்து வருகிறது. இதற்காக மாவட்டங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.


*பயிற்சியின் அவசியம் என்ன?*


இப்போது பாடத் திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சி அளிப்பது அவசியமாகிறது.



 எனவே, இப்போதுள்ள மாவட்ட அளவிலான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துப் பயிற்சி அளிக்க தமிழக அரசுக்கு மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.


அதன்படி, பணிக்கு முந்தைய பயிற்சிகளை மட்டும் அதிகளவு அளிக்க 12 மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.



 இவற்றுடன் அதன் அருகேயுள்ள மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 12 மாவட்ட நிறுவனங்கள், பணிக்கு முந்தைய பயிற்சிகளை அளிப்பதில் கவனம் செலுத்தும்.


*🔴மாவட்டங்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி*

சென்னை மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்துடன் வேலூர், கடலூருடன் விழுப்புரம், கிருஷ்ணகிரியுடன் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டத்துடன் நாமக்கல், கரூர் , பெரம்பலூருடன் திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்டத்துடன் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையுடன் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகருடன் மதுரை, தேனியுடன் திண்டுக்கல் மாவட்டமும், கோத்தகிரியுடன் கோவை, திருப்பூரும், திருநெல்வேலியுடன் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்டை மாவட்டங்களை இணைத்துப் பயிற்சி அளிக்கப்படும்.



 ஆனாலும், இந்த 12 மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைத் தவிர்த்து தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 20 மாவட்ட நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மட்டுமே அளிக்கும்.



 அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை மட்டுமே அளித்திடும்.

மொத்தம் 704 பேரின் மேற்பார்வையில்...ஒவ்வொரு மாவட்ட பயிற்சி நிறுவனத்தில் ஒரு முதல்வர், ஒரு துணை முதல்வர், 5 மூத்த விரிவுரையாளர்கள், 14 விரிவுரையாளர்கள், ஒரு நூலகர் இருப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 22 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 704 பேர் பணியில் இருப்பர்.

15 May 2018

+2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21 வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்


பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 மே 21ம் தேதி பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிசான்று பெறலாம் என்வும் தெரிவித்துள்ளது

சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' மோதல் ?- 1200 அரசுப்பள்ளிகளில் H.M பணியிடம் காலி


தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 1200 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஏழை மாணவர்களின் கல்வி நலன் முற்றிலும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' யுத்தத்தால், உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது. கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுணக்கம் காட்டுவது ஒருபுறம், ஆசிரியர்களின் விருப்பமின்மை மற்றொருபுறம் என மாணவர்களின் கல்வி நலன் அடியோடு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

எதனால் இந்த சிக்கல்? என்பது குறித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க (டிஎன்பிபிஜிடிஏ) மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் நம்மிடம் விரிவாக பேசினார். ''உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது முதல் 38 ஆண்டுகளாக இதே நடைமுறைதான் அமலில் இருந்து வந்தது. ஆனால் சில ஆசிரியர் சங்கங்கள் உள்நோக்கத்துடன் இந்த நடைமுறையை மாற்றி அமைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவர்கள் பெற்ற தடை ஆணையை சட்டப்பூர்வமாக உடைத்தோம்.

பிறகு மற்றொரு சங்கத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதே பிரச்னையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 பட்டதாரி ஆசிரியருக்கோ அல்லது பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கோ தலைமை ஆசிரியர் பணி என்பது பதவி உயர்வு அல்ல. அது ஓர் அங்கீகாரம். நிர்வாகப் பொறுப்புக்கு வருகின்றனர். அவ்வளவுதான். இத்தனைக்கும் பணப்பலன்கூட பெரிதாக இல்லை. பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடுகிறது.

அதேநேரம், நேரடியாக முதுகலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிமூப்புடன் ஒப்பிடுகையில், எங்களுடைய பத்தாண்டு கால பட்டதாரி ஆசிரியர் பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. சார்நிலை பணியாளர்கள் விதி 9, 'ஒரு துறையில் இருந்து வேறு ஒரு துறைக்குச் சென்று பணியாற்றும் ஊழியர்கள், 5 ஆண்டுகளுக்கும் மேல் அந்த துறையில் பணியாற்றும் நேர்வில் தாய்த்துறையில் பதவி உயர்வு பெற, ஓராண்டு காலம் தாய்த்துறைக்கே திரும்பி வந்து பணியாற்ற வேண்டும்' என்று சொல்கிறது.

 இதற்குக் காரணம், தாய்த்துறையில் இருந்து வேறு துறைக்குச் சென்று நீண்ட காலம் பணியாற்றியதால், தாய்த்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதற்காக இவ்வாறு விதி வகுக்கப்பட்டு உள்ளது. இந்த விதியை சுட்டிக்காட்டித்தான் சில சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த விதி ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.

 ஏனெனில், நாங்கள் பணியில் சேர்ந்ததும், பதவி உயர்வில் செல்வதும் பள்ளிக்கல்வித்துறை என்ற ஒரே துறையில்தான். அதோடு, ஆசிரியர் பணியில்தான் தொடர்கிறோம். இந்த விதியை தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் கூட இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், முழு தகுதி இருந்தும் தலைமை ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்காமலேயே ஓய்வு பெற்று விட்டனர். இந்த சர்ச்சை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 3056 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சுமார் 1200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளன.

இதனால், மூத்த பட்டதாரி ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்து பள்ளியை நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், தலைமை ஆசிரியரையே சக ஆசிரியர்கள் மதிக்க மாட்டார்கள் எனும்போது, 'இன்சார்ஜ்' தலைமை ஆசிரியரை எப்படி மதிப்பார்கள்?

தலைமை ஆசிரியர் காலியிடங்கள் பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளில்தான் அதிகமாக இருக்கின்றன. தலைமை ஆசிரியரின் நிர்வாகம் இல்லாததால், அப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் குறைந்து விட்டது. பிளஸ்-1 பொதுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு, புதிய பாடத்திட்டம், வினாத்தாள் மாற்றம் என பல சவால்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தமிழக அரசும் இப்பிரச்னையில் கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என்று இருப்பது வருத்தம் அளிக்கிறது,'' என்கிறார் செல்வராஜ்.

சேலம் மாவட்ட நிலவரம் குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் அரகுள்ளம்பட்டி, அத்தனூர்பட்டி, நாகலூர், வெள்ளக்கடை, மாதையன்குட்டை, பரநாட்டாமங்கலம், கொங்குபட்டி, புக்கம்பட்டி, உலிபுரம், சார்வாய்ப்புதூர், புளியங்குறிச்சி, அக்கமாபேட்டை, வளையசெட்டிப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, தமையனூர், தாண்டானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. பட்டதாரி ஆசிரியர் ஒருவர், முதுகலை ஆசிரியர் பணி அனுபவத்தோடு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக சென்றால் 9 மற்றும் 10ம் வகுப்பு அளவிலேயே மாணவர்களை சிறப்பாக தயார் செய்ய இயலும்.

பள்ளிக்கல்வித்துறை 38 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த நடைமுறை, இப்போதைய மாறிவரும் சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது,'' என்றார்.

12 May 2018

2018 TET EXAME NEWS

DSE BT TO PG PANEL AS ON 01/01/2018 for Tami, Eng, Mat, Physical, Che, Bot and Zoo.COMMERCE SM&CM ECONOMICS SM&CM GEOGRAPHY SM&CM PLITICAL SCIENCE SM&CM PHYSICAL DIRECTOR PANEL PUBLISHED

TAMIL PANEL LIST click here

ENGLISH PANEL LIST click here

Maths and Physics list click here

Che, Bot and Zoo list click here

COMMERCE SM&CM
ECONOMICS SM&CM
GEOGRAPHY SM&CM
PLITICAL SCIENCE SM&CM
PHYSICAL DIRECTOR PANEL list click here

+2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதள முகவரிகள்

பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in , dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு.


தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம்.
-அரசு தேர்வு இயக்ககம்

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள
Click here

dge.tn.nic.in

dge.tn.gov.in

11 May 2018

25 வயதிற்கு மேல் நீட் தேர்வினை எழுத முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு


நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான மாணவச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொதுபிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நீட் தேர்வினை எழுத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கவுன்சிலுக்கு எதிராக கேரள மாணவர்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.


இந்த உத்தரவு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 May 2018

அரசு பள்ளி சீருடை மாற்றம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது



தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.

6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

9 May 2018

10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்

10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. தமிழக அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.

அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம் செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர். 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.

இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி) ஒரு பொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.

இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியான மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடிந்தன.

அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள் செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம் ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித் தேர்வு முடிவுகளைப் பெற்று வெளியிடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில பாடத்தில் தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட
மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்?