FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

21 June 2019

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை & பணிநிரவல் நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்ய

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் இந்த ஆண்டு கலந்தாய்விற்கான கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்விற்கான அட்டவணை வெளியீடு

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பணி நிரவல் நெறிமுறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

16 June 2019

M.Phil., எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை பெற்றுக்கொள்ளலாம்

TNGTA FLASH NEWS.......

 எம்.பில் எப்பொழுது  முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் என்றும்,மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்திருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன்தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNGTA) தொடுத்த வழக்கில் நீதிமன்ற ஆணை வழங்கிவுள்ளது.

பணியில் சேர்வதற்கு முன்பே பட்டம் பெற்றிருந்தால் பணியில் சேர்ந்த தேதியிலிருந்தும் பணியில் சேர்ந்த பிறகு பட்டம் பெற்றிருந்தால் பட்டம் பெற்ற தேதியிலிருந்தும் நிலுவை தொகை பெற்றுக் கொள்ளலாம்

Click here to download judgement order

13 June 2019

Flash news :2018-2019 ஆம் ஆண்டிற்கான புதிய ஓய்வூதிய திட்ட கணக்கீட்டு தாள் வெளியீடு

2018-2019 ஆம் ஆண்டிற்கான புதிய ஓய்வூதிய திட்ட கணக்கீட்டு தாள் 14.06.2019 ல் வெளியிடப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்

CPS account slip for the year 2018-2019

12 June 2019

தொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு அல்லது பணி ஈர்ப்பு மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் முன்னுரிமை குறித்து விளக்கம்



தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பணி ஈர்ப்பு/அலகு மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்ற நாளைக்கொண்டே பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிந்த காலங்கள் தேர்வு/ சிறப்பு நிலை மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என அரசு தகவல்.

29 May 2019

4001 ஆசிரியர் பதவி உயர்வு: போராட்டம் நடத்தியவர்களுக்கு மறுப்பு- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு (முழு விவரம்)


*♦♦தமிழகத்தில் 4001 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர்.*

*♦♦இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:*

*⭕⭕மாநிலம் முழுவதும் பணியாற்றும் 4,001 பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவுள்ளனர். பதவி உயர்வு வழங்கப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.*

*⭕⭕தற்காலிகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை பதவி உயர்வு அளிக்க வேண்டிய பட்டியலை விட அதிகமாக உள்ளதால், அதை ஆசிரியர்களிடம் காண்பித்து அதில் பெயர் சேர்க்கை, திருத்தம் இருந்தால் சரிசெய்ய வேண்டும்.*

*⭕⭕அதேபோல் கல்வித் தகுதியில்லாத ஆசிரியர்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தால் அதை நீக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரிசெய்து வரையறுக்கப்பட்ட பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதுகலை ஆசிரியராக பணியாற்ற வேண்டும்.*

*⭕⭕மேலும் கடந்த காலங்களில் பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும் அவர்கள் பெயர் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு பெயர் பட்டியலுக்கு பரிந்துரைக்காமல் மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.*

*⭕⭕வரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராமல் இருக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி இருந்தும் முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்காத சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*

*⭕⭕அதேபோல் இளங்கலை பாடத்தில் இரட்டைப் பட்டப்படிப்பு படித்தவர்களின் (double degree) பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது.*

*⭕⭕இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*🛑🛑🛑ஒழுங்கு நடவடிக்கையின்கீழ் வரும் ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.*

 *♦♦ஒழுங்கு நடவடிக்கை என்பது அரசு ஊழியர்கள் மீது பிரிவு 17(பி)-ன் கீழ் எடுக்கப்படும். போராட்டங்களில் கலந்துக்கொண்டு கைதானோர் மீது இப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது விலக்கிக்கொள்ளப்படும்வரை பதவி உயர்வு கிடைக்காது.*

*♦♦அதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பு நடத்திய தொடர்போராட்டத்தில் கலந்து கொண்ட எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை, விதி 17-பி இன்  கீழ் ஒழுங்கு நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு  நிலுவையில் உள்ளது.*

*♦♦எனவே அவர்களுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது. அதை மீறி தவறாக அவர்கள் பெயரை பரிந்துரைத்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்மீது நடவடிக்கை வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.*



27 May 2019

TET நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய வீடியோ பதிவு

TET நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய வீடியோ பதிவு

Click here to watch

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் தற்போது வெளியீடு


மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் உடைய பதிவுஎண்ளை அறிய scan.tndge.in

மதிப்பெண் பட்டியல்க்கு dge.tn.nic.in

16 May 2019

M.Phil., ஊக்க ஊதியம் தொடர்பான விளக்கம்

UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பகுதிநேர M.Phil படிப்பிற்கு  ஊக்க ஊதியம் உண்டு.  தொலைதூர கல்வி M.Phil படிப்பிற்கு  மட்டுமே இல்லை .



2007-2008 கல்வி ஆண்டு முதல் மட்டுமே தொலைதூரக் கல்வி முறையில் பெறப்பட்ட M.Phil degree ஊக்க ஊதியத்திற்கு தகுதி அற்றது.(UGC அங்கீகாரம் இல்லை).2007 - 2008க்கு முன் பெறப்பட்ட தொலை தூர M.Phil படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு.





1 April 2019

பத்தாம் வகுப்பு மார்ச் மாத பொதுத் தேர்வுக்கான அரசு விடைக்குறிப்பு அனைத்து பாடங்களுக்கும் பதிவேற்றப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு மார்ச் மாத பொதுத் தேர்வுக்கான அரசு விடைக்குறிப்பு அனைத்து பாடங்களுக்கும் பதிவேற்றப்பட்டுள்ளது

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்

Click here to download

25 March 2019

1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கு (TM/EM) பாட புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கு (TM/EM) பாட புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கில் செல்லவும்

http://tnqrcode.blogspot.com/2019/05/links-for-all-text-book-class-wise.html?m=1

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்


பன்னிரண்டாம் வகுப்பு பாட புத்தகங்கள் பதிவிறக்க


SSLC BOOKS TM/EM New link


பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

10th another link

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் கீழே உள்ள இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன 


18 February 2019

அதிகம் கட்டிய வருமான வரி நமது வங்கிக் கணக்கில் திரும்பி வந்த தேதி அறிய PAN நம்பர் மட்டும் பதிவிட்டு அறிய

அதிகம் கட்டிய வருமான வரி நமது வங்கிக் கணக்கில் திரும்பி  வந்த தேதி அறிய PAN நம்பர் மட்டும் பதிவிட்டு அறிய 

Click here

17 January 2019

JACTTO-GEO மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கோரிக்கைகளை வென்றிட அழைக்கிறோம்.

*JACTTO-GEO
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

நாள்:18/01/2019 வெள்ளிக்கிமை மாலை 5.00 மணி

இடம்: DINDIGUL CEO அலுவலகம்

கோரிக்கைகள்:

1) அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள LKG UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக பணிமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்

2) 3500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம் கைவிடுக.

3) 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும்

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்கங்களின்- ஆசிரியர் சங்கங்களின்- அரசு பணியாளர் சங்கங்களின்  செயல்வீரர்களும் பங்கேற்றிட. உள்ளார்கள்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று
ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கோரிக்கைகளை வென்றிட அழைக்கிறோம்.
*TNGTA- DINDIGUL.*