FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

21 December 2018

*”ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" *வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

*”ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை"

*வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை.

*நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு.

*உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து.

*இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

*கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

Click here to download full go

Palanichamy K

INCOMETAX CALCULATER - வருமானவரி எளிமையான முறையில் கணக்கீடு செய்வதற்கான 8 படிவங்கள் xl sheets (AY-2019-2020) FY-2018-2019

கீழே உள்ள பதிவுகளை பார்க்கவும்

1. படிவம் 1 Click here to download

2. படிவம் 2

3. படிவம் 3

4.படிவம் 4

5. படிவம் 5

மேலும் இரண்டு புதிய படிவங்கள்

6. Macro Enabled Excel Software [Only for Computer Use]




7. Without Macro Excel Software [Computer or Android Mobile Use]



படிவங்கள் தயார் செய்தவர்களுக்கு நன்றி

18 December 2018

*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல்

*TNGTA DINDIGUL.- *தமிழ்நாடு  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின்  சார்பில் மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து M.Phil அனுமதி ஆணையை உடனடியாக முடிக்க வேண்டும் எனக் கூறினோம். அதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் 20171 2018 ஆம் ஆண்டிற்கான M.PHILஅனுமதி ஆணையை **(Next jamabanthikkul) முடித்து தருவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார். மீதமுள்ள நிலுவையை JDP அவர்களிடம் கேட்டு  உடனடியாக பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். விரைவில் அனைவருக்கும் ஆணை கிடைக்கும் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
TNGTA,DINDIGUL.



Andivel . P

16 December 2018

Teacher's Staff fixation 2018

பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது



ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3894 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளது


*தமிழகத்தில் கடந்த 1.8.2017 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட்டதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களை சரண் செய்து இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க அந்தந்த மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்



*அதன் அடிப்படையில் ஆசிரியர்களின்றி உள்ள உபரி காலி பணியிடங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் ஒப்படைக்கப்பட்டு பள்ளி கல்வி  இயக்குநரின் பொது தொகுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு பள்ளி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்


*அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களின் உபரி காலி பணியிடங்கள் 3894 என பட்டியலிடப்பட்டு சரண் செய்யப்பட்டுள்ளது


*இதில் தமிழ் 686, ஆங்கிலம்  334, கணிதம் 676, அறிவியல் 1177, சமூக அறிவில் 690, இதர பாட பிரிவுகள் 66 ஆசிரியர் பணியிடங்களும் உபரியாகியுள்ளன. மேலும் இடைநிலை ஆசிரியர் பிரிவில் 265 ஆசிரியர்கள் உபரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


*அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 465,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 439 பணியிடங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது


*இந்த காலி பணியிடங்களை இனி வரும் காலங்களில் பள்ளி  கல்வித்துறை சார்பில் நடைபெறுகின்ற ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வின்போது காலி பணியிடங்களாக காண்பிக்க கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரால் உத்தரவிடப்பட்டுள்ளது


*மேலும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பராமரிக்கப்படுகின்ற அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரெஜிஸ்டர்) திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று  பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்


*இந்த சரண்டர் செய்யப்பட்ட பணியிடங்களை புதியதாக நியமிக்கப்படும் கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பயன்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 800க்கும்  மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்


*அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார அடிப்படையில் இந்த பணியிடங்கள் குறைவு  ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

15 December 2018

2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH)


1. 14-01-2019; திங்கள்-  போகிப் பண்டிகை

2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்

3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்

4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி

5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்

6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்

7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்

8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்

9. 01-06-2019; சனி- ஷபே காதர்

10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு

11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.

12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.   

13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்

14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.

15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை

16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள

17. 12-11-2019;  செவ்வாய்- குருநானக் ஜெயந்தி

18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்

19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்

20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்


12 December 2018

1 ம்வகுப்பு 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது TERM 3 - CLASS 1,6,9 ALL SUBJECTS NEW TEXTBOOKS T/M & E/M



அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே அனைவருக்கும் வணக்கம். கீழே உள்ள இந்த லிங்க் கில் உங்களுக்கு 1 ம்வகுப்பு 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர்  இந்த லிங்க் வழியாக ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

Click here to download

26 November 2018

ஜேக்டோ ஜியோ காலவரையற்ற போராட்ட ஆயத்த மாநாடு எழுச்சி உரை கி.மகேந்திரன் ஒருங்கினைப்பாளர் .

ஜேக்டோ ஜியோ காலவரையற்ற போராட்ட ஆயத்த மாநாடு எழுச்சி உரை கி.மகேந்திரன் ஒருங்கினைப்பாளர்

Click here to watch

20 September 2018

பிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதிரடி


மத்திய அரசு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான மூன்றாம் காலாண்டில் பிபிஎப், செல்வ மகள் திட்டம் போன்றவற்றின் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.


கடந்த இரண்டு காலாண்டுகளாகச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது உயர்த்தி இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய நிதி அமைச்சகம் புதன் கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதம் முதல் 0.40 சதவீதம் வரை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.


ஒரு வருட இரண்டு வருட டைம் டெபாசிட் திட்டங்கள் மீதா வட்டி விகிதம் 0.30 சதவீதமும், செல்வ மகள் திட்டம், பிபிஎப் போன்ற திட்டங்களுக்கு 0.40 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளனர்.


எனவே அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை எந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதத்தினை மத்திய அரசு அளிக்க இருக்கிறது என்ற விரிவான தகவல்களை இங்குப் பார்க்கலாம்.
டைம் டெபாசிட் திட்டங்கள்

1 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.6 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 6.9 சதவீதம் லாபம் கிடைக்கும்.

2 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.7 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 7.0 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.


3 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது 6.9 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது 7.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


4 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்த போது 7.4 சதவீத வட்டி விகித லாபம் அளித்து வந்த நிலையில் 7.8 சதவீதமாக வட்டி விகித உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் 6.9 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 6.9 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்களுக்கான இந்த 5 வருட சேமிப்புத் திட்டத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 8.3 சதவீத லாபம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை 8.7 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


5 வருட மாதாந்திர வருவாய் கணக்கு

5 வருட மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 8.3 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
5 வருட தேசிய சேமிப்புப் பத்திரம்
அரசு பத்திர திட்டங்களின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் 7.6 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8.0 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


பிபிஎப்

பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.6 சதவீதமாக இருந்து வந்த வட்டி விகிதம் 8.0 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


கிசான் விகாஸ் பத்ரா

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.3 சதவீதம் லாபம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது 7.7 சதவீதமாக உயர்த்துப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் 118 நாட்கள் முதிர்வு என்று இருந்தது 112 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.


செல்வ மகள் திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 8.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் காலாண்டில் 8.5 சதவீத லாபம் கிடைக்க உள்ளது.


சேமிப்பு கணக்கு

தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு தொகைக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை.


5 September 2018

ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


ஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் குறித்து இங்கே காணலாம்.
ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் எனப்படுவோர். அவர்களை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டியது நம் கடமை. இருப்பினும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.


ஆசிரியர் பணி:


வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. அதையும் தாண்டி, வாழ்க்கையை வாழ கற்றுத் தர வேண்டும். இதன் அடிப்படை கூறுகளாவன ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவை அடங்கும். இப்பணியைச் செய்ய தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராக செயல்பட வேண்டும்.


ஆசிரியர் தினம்:

ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மாபெரும் தத்துவ மேதையாக இருந்தார். இவரை கௌரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இதனை கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.


ஆசிரியர் தினக் கொண்டாட்டம்:

செப்டம்பர் 5ஆம் தேதியை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி வருகின்றன.


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்:


திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் ராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இந்து மத இலக்கியங்கள், மேற்கிந்திய சிந்தனைகளியும் கற்றுத் தேர்ந்தவர்.
1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். 1923ல் இந்தியத் தத்துவம் என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
1931ல் ஆந்திர பல்கலைக்கழக் துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967 வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது