FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

3 December 2020

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தகவல் பெறுவதே ஒரு கலை

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி என்னென்ன தகவல்களை பெறலாம் எவ்வாறு பெறலாம் என்பதற்கான ஒரு எளிய விளக்கம்.


பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி லி.லீனஸ் வழக்கறிஞர்

2 December 2020

SBI ல் Salary Account வைத்துள்ளவர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள்

 SBI ல் Salary Account வைத்துள்ளவர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள கீழே உள்ள PDF file பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 


பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

1 December 2020

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கான தினம் கொண்டாடுவதற்காக டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குவதற்கான ஆணை






 

மருத்துவ விடுப்பின் பொழுது ஈட்டிய விடுப்பு எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்பட்ட விளக்கம்

 மருத்துவ விடுப்பு ஒரு ஆசிரியர் எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்


பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 April 2020

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு GO 148 2018

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு
NOV 25, 2018

அரசு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்கள் 
நெல்லை:  தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால், அந்த ஊதிய உயர்வு கிடைக்காமலே ஓய்வுபெறும் நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசு அலுவலர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஓய்வுபெறும் மாதத்திற்கு அடுத்த நாள் ஊதிய உயர்வு வந்தால் முன்பே ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஊதிய உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் (எண்.148) கூறியிருப்பதாவது:


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தாலோ, மரணம் அடைந்து விட்டாலோ அந்த அரசு ஊழியர்களுக்கு அந்த மூன்று மாத தொடக்கத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் இருந்து மூன்று மாதங்களில் ஊதிய உயர்வு இருந்தால், கடைசி மூன்று மாதத்தின் முதல் நாளில் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஊதிய உயர்வுக்கு ஓராண்டு ஆகியிருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, ஓய்வுபெறும் ஊழியர்கள் 10வது மாதத்திலேயே ஊதிய உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்’ என்றார்.


GO 148 2018
அரசாணையை பதிவிறக்கம் செய்ய

15 February 2020

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி, நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான, மொத்த காலியிடங்களில், 2 சதவீதத்தை, கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான, அமைச்சு பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 முடித்து, தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால், அவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இனிவரும் காலங்களில், தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

29 January 2020

எளிமையாக வருமானவரி கணக்கீடு செய்ய படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

Income tax Calculation Software FY2019-2020 @ MSKedusoft

MSK EDUSOFT
       
Income tax Calculation Software FY2019-2020 @ MSKedusoft

Macro Enabled Excel Software [Only for Computer Use]

Click Here to Download     

Instruction for Enable Macro

Click Here to Download     

நன்றி
திரு.செந்தில்குமார், விருதுநகர்.

மேலும் சில படிவங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கில் செல்லவும்

10 January 2020

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களுடனான சந்திப்பு

நமது இயக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்து பட்டதாரிகளுக்கான கோரிக்கைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பேசினார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் பாடச்சுமை கருதி 8 பட்டதாரி ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கையை மிகவும் வலியுறுத்தி பேசினார். 17 B ரத்து செய்திட கோரியும் சமூக அறிவியல் பாடத்திற்கான ஏழு பாடவேளைகள் ஒதுக்க வேண்டியும், 2008 க்குப் பிறகு தொலைதூரக் கல்வி மற்றும் பகுதி நேரத்தில் எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு கோவை தணிக்கை தடை விதித்ததை ரத்து செய்து தரக் கோரியும், 2004_ 2006 ஒப்பந்தப் பணி காலத்தினை பணி வரன்முறை செய்திடவும் இன்னும் பிற ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை  பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது





2019- 20 ஆம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கீடு செய்ய படிவங்களின் தொகுப்பு

30 October 2019

22 October 2019

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொறுப்பாளர்களின் இன்றைய சென்னை பயணம் குறித்த விரிவான தகவல்கள்

*அனைவருக்கும்*
               *வணக்கம்*
      இன்று (22.10. 19) நமது *சிறப்புத் தலைவர்* , பொதுச் செயலாளர் திரு *அ.சுந்தரமூர்த்தி* அவர்கள், மாநிலச் செயலாளர் திரு *K.B. நரசிம்மன்* மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு *சௌத்திரி* , செயலாளர் திரு *கணேஷ்* திரு *வெங்கடே.சலு* ஆகியோருடன் இணை இயக்குநர் (மேல்நிலை) திரு *ராஜேந்திரன்* அவர்களையும், மெட்ரிக் இயக்குநர் திரு *கருப்புசாமி* அவர்களையும் , தொடக்கக்கல்வி இயக்குநர் திரு *சேதுராமவர்மா* அவர்களையும் சந்தித்து அவர்களது பணி சிறக்க பாராட்டுகளையும் , வாழ்த்துகளையும் நமது அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொண்டோம்.
         பின்னர் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு *நாகராஜ முருகன்*  அவர்களை சந்தித்து பணி நீட்டிப்பு , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு - விளக்கம் கோரப்பட்டுள்ளது உள்ளிட்ட சிலவற்றை குறித்து பேசினோம் .பள்ளிக் கல்வி இயக்குநர் திரு *ச.கண்ணப்பன்* அவர்களை சந்தித்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை 8 ப.ஆ பணியிடங்களை உறுதி படுத்திட வேண்டியுள்ள தேவைகள் குறித்தும் , த. ஆ பொறுப்பு வகித்தவர்களுக்கு கூடுதல் படி வழங்கிட நிதிக் கட்டுபாட்டு அலுவலர் அனுமதி வழங்கிடுவது  , போராட் காலத்தில் ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள 17 B யை இரத்து செய்திடுவது குறித்தும் பேசினோம்.
     பத்தாம் வகுப்பு கணிதபாட தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் பகுதி - ஈ  ல் வினா எண் 43 ஐ செய்முறை வடிவியலில் இருந்தும் , 44 ஐ வரைபடத்திலிருந்தும் மட்டுமே கேட்க வேண்டும் எனவும் .அவ்வினாக்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்றும் , வினா எண் 28 மற்றும் 42 ஆகிய கட்டாய வினாக்கள் தேர்ந்தெடுக்கும் வினாக்களாக (either or Choice ) கேட்டிட வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் திருமதி *உஷாராணி* அவர்கள் மற்றும் இணை இயக்குநர் (தேர்வு துறை )திரு *ராமசாமி* அவர்களிடமும் பேசினோம் . கன்னியாகுமரி , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மார்ச் 2019 தேர்வுப் பணிக் கான உழைப்பூதியங்கள் வழங்கப்படாமல் இருப்பது குறித்தும்     பேசியுள்ளோம்.
          விரைந்து இது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறியுள்ளார்கள்.
        SCERT இணை இயக்குநர் திரு *செயக்குமார்* அவர்களை சந்தித்து வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேசியுள்ளோம் என்பதனன தங்களது
தகவலுக்காக ...

                  இவண்
      *கி. மகேந்திரன்*
         மாநிலத் தலைவர் .








10 September 2019

தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் முன்னுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் முன்னுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.



Click here to download judgement copy

26 July 2019

தற்போது வெளியிடப்பட்டுள்ள BAS 8.1.0.2 version software ஐ பதிவிறக்கம் செய்ய

தற்போது வெளியிடப்பட்டுள்ள BAS 8.1.0.2 version software ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்


BAS Windows Client Version 8.1.0.2 

17 July 2019

E- FILLING OF INCOME TAX RETURNS 2019 - நமது வருமான வரிக் கணக்கை எவ்வாறு இணையத்தில் தாக்கல் செய்வது? ( எளிய வழிமுறைகள் தமிழில் ...) LAST DATE : 29 JULY 2019

*E- FILLING OF INCOME TAX RETURNS 2019 - நமது வருமான வரிக் கணக்கை எவ்வாறு இணையத்தில் தாக்கல் செய்வது? ( எளிய வழிமுறைகள் தமிழில் ...) LAST DATE : 29 JULY 2019

Click here to view

12 July 2019

ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்... இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது..!


🌏♨🤝ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற கட்டணங்களை ஸ்டேட் பேங்க் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

🌏♨🤝எஸ்.பி.ஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக திகழ்ந்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 பயன்படுத்துவதும் தெரியவந்தது. அத்துடன் எஸ்பிஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுகிறது என தகவல் தெரிவித்திருந்தது.

🌏♨🤝இந்நிலையில், ஒவ்வொரு முறை NEFT, IMPS, RTGS செய்யும் போது ரூ.2.50 முதல் ரூ.56 ரூபாய் வரையிலான ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதனிடையே, ஜூலை 1-ம் தேதி NEFT, IMPS, RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

🌏♨🤝இதனை ஏற்றக்கொண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை எவ்வித கட்டணமும் இன்றி செய்துகொள்ளலாம் என ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.