FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

15 February 2020

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி, நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான, மொத்த காலியிடங்களில், 2 சதவீதத்தை, கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான, அமைச்சு பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 முடித்து, தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால், அவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இனிவரும் காலங்களில், தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

29 January 2020

எளிமையாக வருமானவரி கணக்கீடு செய்ய படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

Income tax Calculation Software FY2019-2020 @ MSKedusoft

MSK EDUSOFT
       
Income tax Calculation Software FY2019-2020 @ MSKedusoft

Macro Enabled Excel Software [Only for Computer Use]

Click Here to Download     

Instruction for Enable Macro

Click Here to Download     

நன்றி
திரு.செந்தில்குமார், விருதுநகர்.

மேலும் சில படிவங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கில் செல்லவும்

10 January 2020

பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களுடனான சந்திப்பு

நமது இயக்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் அவர்களை சந்தித்து பட்டதாரிகளுக்கான கோரிக்கைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பேசினார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியிலும் பாடச்சுமை கருதி 8 பட்டதாரி ஆசிரியர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கையை மிகவும் வலியுறுத்தி பேசினார். 17 B ரத்து செய்திட கோரியும் சமூக அறிவியல் பாடத்திற்கான ஏழு பாடவேளைகள் ஒதுக்க வேண்டியும், 2008 க்குப் பிறகு தொலைதூரக் கல்வி மற்றும் பகுதி நேரத்தில் எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு கோவை தணிக்கை தடை விதித்ததை ரத்து செய்து தரக் கோரியும், 2004_ 2006 ஒப்பந்தப் பணி காலத்தினை பணி வரன்முறை செய்திடவும் இன்னும் பிற ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை  பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது





2019- 20 ஆம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கீடு செய்ய படிவங்களின் தொகுப்பு

30 October 2019

22 October 2019

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொறுப்பாளர்களின் இன்றைய சென்னை பயணம் குறித்த விரிவான தகவல்கள்

*அனைவருக்கும்*
               *வணக்கம்*
      இன்று (22.10. 19) நமது *சிறப்புத் தலைவர்* , பொதுச் செயலாளர் திரு *அ.சுந்தரமூர்த்தி* அவர்கள், மாநிலச் செயலாளர் திரு *K.B. நரசிம்மன்* மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு *சௌத்திரி* , செயலாளர் திரு *கணேஷ்* திரு *வெங்கடே.சலு* ஆகியோருடன் இணை இயக்குநர் (மேல்நிலை) திரு *ராஜேந்திரன்* அவர்களையும், மெட்ரிக் இயக்குநர் திரு *கருப்புசாமி* அவர்களையும் , தொடக்கக்கல்வி இயக்குநர் திரு *சேதுராமவர்மா* அவர்களையும் சந்தித்து அவர்களது பணி சிறக்க பாராட்டுகளையும் , வாழ்த்துகளையும் நமது அமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொண்டோம்.
         பின்னர் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு *நாகராஜ முருகன்*  அவர்களை சந்தித்து பணி நீட்டிப்பு , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு - விளக்கம் கோரப்பட்டுள்ளது உள்ளிட்ட சிலவற்றை குறித்து பேசினோம் .பள்ளிக் கல்வி இயக்குநர் திரு *ச.கண்ணப்பன்* அவர்களை சந்தித்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை 8 ப.ஆ பணியிடங்களை உறுதி படுத்திட வேண்டியுள்ள தேவைகள் குறித்தும் , த. ஆ பொறுப்பு வகித்தவர்களுக்கு கூடுதல் படி வழங்கிட நிதிக் கட்டுபாட்டு அலுவலர் அனுமதி வழங்கிடுவது  , போராட் காலத்தில் ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள 17 B யை இரத்து செய்திடுவது குறித்தும் பேசினோம்.
     பத்தாம் வகுப்பு கணிதபாட தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் பகுதி - ஈ  ல் வினா எண் 43 ஐ செய்முறை வடிவியலில் இருந்தும் , 44 ஐ வரைபடத்திலிருந்தும் மட்டுமே கேட்க வேண்டும் எனவும் .அவ்வினாக்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்றும் , வினா எண் 28 மற்றும் 42 ஆகிய கட்டாய வினாக்கள் தேர்ந்தெடுக்கும் வினாக்களாக (either or Choice ) கேட்டிட வேண்டும் எனவும் தேர்வுத்துறை இயக்குநர் திருமதி *உஷாராணி* அவர்கள் மற்றும் இணை இயக்குநர் (தேர்வு துறை )திரு *ராமசாமி* அவர்களிடமும் பேசினோம் . கன்னியாகுமரி , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மார்ச் 2019 தேர்வுப் பணிக் கான உழைப்பூதியங்கள் வழங்கப்படாமல் இருப்பது குறித்தும்     பேசியுள்ளோம்.
          விரைந்து இது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறியுள்ளார்கள்.
        SCERT இணை இயக்குநர் திரு *செயக்குமார்* அவர்களை சந்தித்து வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேசியுள்ளோம் என்பதனன தங்களது
தகவலுக்காக ...

                  இவண்
      *கி. மகேந்திரன்*
         மாநிலத் தலைவர் .








10 September 2019

தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் முன்னுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் முன்னுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.



Click here to download judgement copy

26 July 2019

தற்போது வெளியிடப்பட்டுள்ள BAS 8.1.0.2 version software ஐ பதிவிறக்கம் செய்ய

தற்போது வெளியிடப்பட்டுள்ள BAS 8.1.0.2 version software ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்


BAS Windows Client Version 8.1.0.2 

17 July 2019

E- FILLING OF INCOME TAX RETURNS 2019 - நமது வருமான வரிக் கணக்கை எவ்வாறு இணையத்தில் தாக்கல் செய்வது? ( எளிய வழிமுறைகள் தமிழில் ...) LAST DATE : 29 JULY 2019

*E- FILLING OF INCOME TAX RETURNS 2019 - நமது வருமான வரிக் கணக்கை எவ்வாறு இணையத்தில் தாக்கல் செய்வது? ( எளிய வழிமுறைகள் தமிழில் ...) LAST DATE : 29 JULY 2019

Click here to view

12 July 2019

ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்... இனி இதற்கெல்லாம் கட்டணம் கிடையாது..!


🌏♨🤝ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற கட்டணங்களை ஸ்டேட் பேங்க் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

🌏♨🤝எஸ்.பி.ஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக திகழ்ந்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 பயன்படுத்துவதும் தெரியவந்தது. அத்துடன் எஸ்பிஐ வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுகிறது என தகவல் தெரிவித்திருந்தது.

🌏♨🤝இந்நிலையில், ஒவ்வொரு முறை NEFT, IMPS, RTGS செய்யும் போது ரூ.2.50 முதல் ரூ.56 ரூபாய் வரையிலான ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதனிடையே, ஜூலை 1-ம் தேதி NEFT, IMPS, RTGS சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

🌏♨🤝இதனை ஏற்றக்கொண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை எவ்வித கட்டணமும் இன்றி செய்துகொள்ளலாம் என ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.


பத்தாம் வகுப்பிற்கான மாதாந்திர பாடத்திட்டம் 2019-2020 ஆம் கல்வியாண்டு

🔥 SSLC Month Wise full Syllabus🔥


10th Maths Month Wise Full Syllabus


10th English Month Wise Full Syllabus

Click here to download



10th Maths Month Wise full Syllabus
Click here to download


10th Science Month Wise full Syllabus
Click here to download



10th Social Science Month Wise full Syllabus
Click here to download


9 July 2019

பகுதிநேர M.Phlil., க்கு ஊக்க ஊதியம் தொடர்பான RTI தகவல்கள்

அன்பான ஆசிரியர் பெருமக்களே இன்று ஒரு Rti தபால் பள்ளிக்கல்வி துணைஇயக்குநர் அவர்களிடம் வந்துள்ளது.அதில்"மிக தெளிவாக Regular mode ல்Mphil  படித்திருந்தால் ஊக்க ஊதியம் பெறலாம் என்று தகவல் வந்துள்ளது...Regular mode என்பது Full time / Part time என்று அர்த்தம்.இரண்டையுமே குறிப்பது Regular mode ஆகும்....UGC மிக சரியாக Regula mode ற்கான clarification letter கொடுத்துள்ளது...மேலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே ஒரு ஆணையில் Mphil or p.hd (Full time / Part time ) என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே part time என்பது Regular mode ஆகும்....யாரும் பயபடவேண்டாம் கண்டிப்பாக ஊக்கஊதியம் உண்டு....அதற்கான அனைத்து ஆதாரங்களும் கீழே அனுப்புகிறேன்.அதேபோல் பெரியார் பல்கலைக்கழகமும் ஆதாரம் அளித்துள்ளது.......மேலும் இது சம்மந்தமாக நமக்கு சாதகமாக, பல  தகவல்கள் வர இருக்கிறது.....அதும், வந்தவுடன்"அனுப்புறேன்.....

இப்படிக்கு

தா.அ.கமலக்கண்ணன்,
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,(TNGTA)
சேலம் மாவட்டம்...









7 July 2019

நமது சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை திண்டுக்கல் (புற நகர் )

நமது சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை திண்டுக்கல் (புற நகர் )







திண்டுக்கல்லில் உள்ள புற நகர் பள்ளிகளில் ,உறுப்பினர் சேர்க்கையில் உடனிருந்த மாநில துணைத் தலைவர்              இராம .அய்யாக்கண்ணு ,மாவட்ட தலைவர் ராஜக்கிளி மற்றும் மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் .

21 June 2019

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை & பணிநிரவல் நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்ய

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் இந்த ஆண்டு கலந்தாய்விற்கான கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் கலந்தாய்விற்கான அட்டவணை வெளியீடு

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பணி நிரவல் நெறிமுறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

16 June 2019

M.Phil., எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை பெற்றுக்கொள்ளலாம்

TNGTA FLASH NEWS.......

 எம்.பில் எப்பொழுது  முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் என்றும்,மேலும் வாங்கிய நிலுவை திருப்பி செலுத்திருந்தால் அந்த தொகையினையும் திருப்பி வழங்குவதற்கும் மற்றும் நிலுவை தொகையினை வாங்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கும் முன்தேதியிட்டு நிலுவை தொகையினை வழங்குவதற்கு அரசாங்கம் பரிந்துரை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்(TNGTA) தொடுத்த வழக்கில் நீதிமன்ற ஆணை வழங்கிவுள்ளது.

பணியில் சேர்வதற்கு முன்பே பட்டம் பெற்றிருந்தால் பணியில் சேர்ந்த தேதியிலிருந்தும் பணியில் சேர்ந்த பிறகு பட்டம் பெற்றிருந்தால் பட்டம் பெற்ற தேதியிலிருந்தும் நிலுவை தொகை பெற்றுக் கொள்ளலாம்

Click here to download judgement order